திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம் – வேலைவாய்ப்பு அறிவிப்பு! முழு விவரம் இதோ!

0
திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு! முழு விவரம் இதோ!
திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம் - வேலைவாய்ப்பு அறிவிப்பு! முழு விவரம் இதோ!
திருப்பதி தேவஸ்தானத்தில் ரூ.1 லட்சம் வரை சம்பளம் – வேலைவாய்ப்பு அறிவிப்பு! முழு விவரம் இதோ!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதிகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

வேலைவாய்ப்பு:

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் வழக்கம் போல எந்தவித கட்டுப்பாடுகளின்றி வருகை புரிகின்றனர். இந்த நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் திருப்பதியில் Pediatrician பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இதனை தகுதியான நபர்கள் கொண்டு நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் PG Degree, D.M, DNB, M.D உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். மேலும் இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என்று தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகிற 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (ஆக. 24) ‘இந்த’ ஏரியாக்களில் மின்தடை – முழு விவரம் இதோ!

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.67,700 முதல் ரூ.1,67,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் https://drive.google.com/file/d/122WWdjT_jNTPSybkrRA5ZlRMVSADIs-0/view என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!