திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு!

0
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – தேவஸ்தான அதிகாரி அறிவிப்பு!

திருப்பதி திருமலை கோவிலில் இன்னும் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

திருப்பதி:

நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு முதல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பத்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சுவாமிக்கு தினசரி பூஜைகள் கோயில் வளாகத்தில் உள்ள ஊழியர்கள் முன்னிலையில் நடைபெற்று வந்தது. அரசின் நோய் தடுப்பு பணிகளால் கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் மாதந்தோறும் முன்பதிவு அடிப்படையில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக இணையதளம் மூலம் 300 ரூபாய் டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட் விநியோகம் தொடங்கப்படும்.

மீண்டும் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல் – பாதிக்கப்படும் பொருளாதாரம்! அச்சத்தில் தொழிலாளர்கள்!

கடந்த மாதம் புத்தாண்டு மற்றும் ஏகாதாசியை முன்னிட்டு கூடுதல் தரிசன டிக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள திருப்பதி தேவஸ்தான அரங்கில் நேற்று (பிப்.7) தமிழகம் மற்றும் புதுவை தேவஸ்தான ஆலோசனை குழு நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக திருப்பதி தேவஸ்தான தலைவர் ராஜசேகர் ரெட்டி ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். மேலும் நிகழ்ச்சியில் 24 பேர் உறுப்பினர்களாகவும் பதவியேற்றுக் கொண்டனர்.

தமிழக ரேஷன் கடை பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு – பிப்.8ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம்!

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய சுப்பா ரெட்டி, இன்னும் இரண்டு மாதங்களில், திருப்பதி திருமலை கோவிலில், கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்து, நீக்கப்பட்டு பக்தர்கள் வழக்கம் போல தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று கூறினார். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள தேவஸ்தானத்திற்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். மானிய விலையில் லட்டுகள் விற்கப்படும். விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here