விவாகரத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா? இது தான் காரணம்?

0
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா? இது தான் காரணம்?
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா? இது தான் காரணம்?
விவாகரத்திற்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணையும் தனுஷ் & ஐஸ்வர்யா? இது தான் காரணம்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக விவாகரத்து செய்து 18 வருட திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்ட தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகர் தனுஷ்:

தென் இந்திய சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். பிரபல தமிழ் சினிமா திரைப்பட இயக்குனரான கஸ்தூரி ராஜா அவர்களின் மகனான தனுஷ் ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்றதுடன் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தார். இப்படி சினிமா உலகின் உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ்.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த தனுஷுக்கு ‘ஆடுகளம்’ மற்றும் ‘அசுரன்’ போன்ற திரைப்படங்கள் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகளை பெற்று தந்தது. இது தவிர பாலிவுட்டிலும் களமிறங்கிய தனுஷுக்கு மொழியை கடந்து ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். இப்படி சினிமா வாழ்க்கையில் பல வெற்றிகளைக் கண்ட நடிகர் தனுஷின் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கிறது. அதாவது, திரைப்பட இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு, கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கழித்து அவரை விவகாரத்து செய்வதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தார் தனுஷ்.

வைல்ட் கார்ட் எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாண்டி மாஸ்டர் – போட்டியாளர்கள் மகிழ்ச்சி!

இந்த விவாகரத்து எதிர்பார்க்கப்படாத ஒன்றாக இருந்ததால், ரசிகர்கள் பலரும் இவர்கள் மீண்டுமாக ஒன்று சேர வேண்டும் என்று கோரிக்கையிட்டு வந்தனர். இருப்பினும் விவாகரத்தை தொடர்ந்து திரைப்பட இயக்கத்தில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தற்போது ‘ஓ சாத்தி சல்’ என்ற ஹிந்தி திரைப்படத்திற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். இதற்கிடையில் விவாகரத்து குறித்து அறிவித்த பிறகும், ஐஸ்வர்யா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் தனுஷின் பெயரை இந்த மாதம் தான் நீக்கி இருக்கிறார். இருப்பினும் இன்ஸ்டா பக்கத்தில் அவர் தனுஷை பின் தொடர்ந்து வருகிறார். இதனால் எப்படியாவது தனுஷ், ஐஸ்வர்யா மீண்டும் இணைவார்கள் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!