மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுமுறை கிடையாது? அமைச்சர் கொடுத்த விளக்கம்!

0
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுமுறை கிடையாது? அமைச்சர் கொடுத்த விளக்கம்!
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுமுறை கிடையாது? அமைச்சர் கொடுத்த விளக்கம்!
மத்திய அரசு பெண் ஊழியர்களுக்கு மாதவிலக்கு விடுமுறை கிடையாது? அமைச்சர் கொடுத்த விளக்கம்!

நாடு முழுவதும் மத்திய அரசுப்பணி செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு விடுமுறை குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் கொடுத்து இருக்கிறார்

மாதவிலக்கு விடுமுறை

கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அரசு பணிகளில் இருக்கும் பெண்களுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் மாதவிலக்கு நாட்களில் விடுமுறை விடப்படும் என மகளிர் தினத்தன்று அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மதுரை தொகுதி மக்களவை எம்.பி வெங்கடேசன் மத்திய அரசு பணிகளில் இருக்கும் பெண்களுக்கு மாதவிலக்கு கால விடுப்பு வழங்குவது குறித்து கேள்வி எழுப்பினார்.

தமிழக மருத்துவ துறையில் 1021 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் வெளியிட்ட தகவல்!

அதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, மத்திய அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசுப்பணிகள் (விடுமுறை) விதிகள்-1972-ல் மாதவிலக்கு விடுமுறைக்கான எந்த ஏற்பாடுகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள விதிகளால் அந்த விடுமுறையை சேர்க்க தற்போது எந்தவித முன்மொழியும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தற்போது அரசு ஏற்கனவே பெண் ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு, கூடுதல் சாதாரண விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, மகப்பேறுவிடுப்பு, மாற்றியமைக்கப்பட்ட விடுப்பு, நிலுவையில்லா விடுப்பு, மருத்துவ சான்றிதழ் விடுப்பு போன்ற பல விடுமுறைகளை வழங்கி வருவதாக அவர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!