
நாடு முழுவதும் ஏப்ரல் 1 முதல் நகைகளுக்கு ஹால்மார்க் முத்திரை கட்டாயம் – மக்கள் மத்தியில் நிலவும் அச்சம்!
நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் விற்கப்படும் நகைகளில் ஹால்மார்க் முத்திரையை கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட நிலையில் அதனால் பழைய நகைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
ஹால்மார்க் கட்டாயம்
மத்திய அரசு கடந்த 2021 ஆண்டு ஜூன் மாதம் வெளியிட்ட அறிவிப்பின் படி, நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளில் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் அதற்கு மேல் ஹால்மார்க் இல்லாத நகைகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தமிழ்நாடு கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் கட்டாயப் பாடமாக தமிழ் மொழி – மத்திய அமைச்சர் விளக்கம்!
அதனால் நகை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல சந்தேகம் இருக்கிறது. அதன் படி முன்னதாக ஹால்மார்க் முத்திரையுடன் அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தனித்த 4 இலக்க அடையாள எண் (huid) வழங்கப்படுகிறது. ஆனால் இப்போது 6 இலக்கமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஹால்மார்க் இல்லாமல் நகைகள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு நகையின் மதிப்பைவிட 5 மடங்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும் ஏற்கனவே பழைய நகைகள் வைத்திருப்பவர்கள் தங்களது நகைக்கு ஆபத்து ஏற்படுமா என பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் நிலையில் இந்த விதி விற்பனைக்கு மட்டும் தான் என அரசு தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 6 இலக்க எண்களை முத்திரை பதிப்பதில் நடைமுறை சிக்கல் இருப்பதாகவும் குறைந்தபட்சம் 6 மாதங்களாவது அவகாசம் வேண்டும் நகைக்கடை வியாபாரிகள் விளக்கம் கொடுத்துள்ள நிலையில் சென்னையில் ஹால்மார்க் சான்றிதழ் பெறுவதற்கான மையங்கள் 12 உள்ளது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் உள்ளது. ஆனால் அது போதாமல் இருப்பதால் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பித்து நேரம் வாங்க வேண்டும் என்பதால் மேலும் கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.