திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மார்ச் 13 முதல் தெப்பத்திருவிழா!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - மார்ச் 13 முதல் தெப்பத்திருவிழா!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு - மார்ச் 13 முதல் தெப்பத்திருவிழா!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மார்ச் 13 முதல் தெப்பத்திருவிழா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் 13 ஆம் தேதி முதல் தெப்பத்திருவிழா தொடங்கவுள்ளது. 5 நாட்கள் நடைபெறவுள்ள இந்த தெப்பத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

தெப்ப திருவிழா:

இந்தியாவில் கொரோனா தொற்றின் காரணமாக மத சார்பு தொடர்பான அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. சற்று கொரோனாவின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததும் சிறு சிறு கோவில்கள் திறக்கப்பட்டன. தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்த கோவிலில் மாசி மாத திருவிழா நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாசி மாதத்தில் தெப்பத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – இறுதிப்பட்டியல் வெளியீடு!

1468 ஆம் ஆண்டு முதல் இந்த தெப்பத்திருவிழா நடைபெற்றதாக சான்றுகள் கூறுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான தெப்பத்திருவிழா வரும் மார்ச் 13 ஆம் தேதியில் தொடங்கி மார்ச் 17 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த திருவிழா நடைபெறும் ஐந்து நாட்களுமே மாலை 7 மணி முதல் நண்பகல் 1 மணி வரை புஷ்கரணியில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி முதல்நாளான மார்ச் 25-ந் தேதி உற்சவரான சீதாராமலட்சுமணர் ஊர்வலம் நடைபெறவுள்ளது.

தமிழக அரசின் சமூக நலத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – மார்ச் 18ம் தேதி கடைசி நாள்!

இரண்டாம் நாள் கிருஷ்ணர், ருக்மணி, ராதை ஊர்வலமும் நடைபெறும். மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆகிய மூன்று நாட்களும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் கோவிலை சுற்றி உலா வந்து வருவர். கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் கொரோனா பரவக் கூடாது என்பதற்காக பக்தர்கள் மாஸ்க் அணிந்து வரும்படியும், சமுக இடைவெளியை பின்பற்ற கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!