தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!

0
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு - மத்திய அமைச்சர் விளக்கம்!
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு - மத்திய அமைச்சர் விளக்கம்!
தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு – மத்திய அமைச்சர் விளக்கம்!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து வருகிறது. இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அவர் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு பற்றிய தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

ரூபாய் மதிப்பு சரிவு:

இந்தியாவில் தற்போது பொருளாதார சரிவு மற்றும் பண வீக்கத்திற்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது. தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.33 ஆக சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ரூபாய் மதிப்பு சரிவுக்கு உக்ரைன் – ரஷ்யா போர் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த போரால் கச்சா எண்ணெய், தங்கம் விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கி – பிரதமர் மோடி இன்று திறப்பு!

இதன் காரணமாக அந்நிய முதலீடுகள் திடீரென திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. மேலும் பல நாடுகள் தங்களது முதலீடுகளை டாலரில் மாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை அதிகரித்தது. இதனால் முதலீட்டாளர்களின் வட்டி விகிதமும் உயர்ந்தது. இந்த வட்டி உயர்வு முதலீட்டாளர்களை டாலரை நோக்கி இழுத்தது. இந்த வருடம் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமான அளவு சரிவை சந்தித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

Exams Daily Mobile App Download

தற்போது ஏற்பட்டுள்ள ரூபாய் மதிப்பு சரிவை சரி செய்ய இந்திய ரிசர்வ் வங்கி சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பின் அன்னிய செலாவணிகளைச் செலவு செய்துள்ளது. இருப்பினும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன் இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வதாகவே நான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் வளரும் நாடுகளின் நாணயங்களை விட, இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக கருதுவதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!