இனி காலை 6 மணி முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

0
இனி காலை 6 மணி முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அதிரடி உத்தரவு!
இனி காலை 6 மணி முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அதிரடி உத்தரவு!
இனி காலை 6 மணி முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அதிரடி உத்தரவு!

இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்வதில் சிரமப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஒடிசா மாநில அரசு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியுள்ளது.

கோடை வெயில்:

இந்தியாவில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை காலம் முழுவதும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும். அதன் காரணமாக முன்னேற்பாடாக ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக குறைவான நாட்கள் தான் நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனால் இன்னும் பொதுத் தேர்வுக்கான பாடங்கள் இன்னும் நடத்தி முடிக்க வில்லை.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கோடைகாலம் தொடங்கி உள்ளதால் ஒடிசா மாநிலத்திலும் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரிக்கிறது. இது மாணவர்களுக்கு மிகுந்த சிரமத்தை அளிக்கிறது. இம்மாநிலத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு கடந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பள்ளிகளில் வகுப்புகள் காலை 6 மணி முதல் தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை அறிவிப்பு – வலுக்கும் முக்கிய கோரிக்கை!

மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் பி.பி.சேத்தி கூறியதாவது, ஒடிசாவில் கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைவான நாட்களே பள்ளிகளில் வகுப்புகள் நடைபெற்றது, எனவே மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கோடை விடுமுறை நாட்களை குறைவாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் காலை 8.30 மணிக்கு வெயிலின் அளவு 32 முதல் 34 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனால் இந்த நேரத்தில் பள்ளிக்கூட வகுப்புகள் (காலை 6 முதல் 9 மணி) வரை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவும் வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here