மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ஐடி நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்!

0

மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்த ஐடி நிறுவனம் – அதிர்ச்சியில் ஊழியர்கள்! இந்திய ஐடி துறையில் சமீப காலமாக அதிக பரபரப்பை ஏற்படுத்தி வரும் மூன்லைட்டிங் முறையால் அதிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரு முன்னணி நிறுவனம் இதற்காக அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மூன்லைட்டிங் முறை:

ஒரு நிறுவனத்தில் முழு நேரமாக பணியாற்றிக் கொண்டே, மற்றொரு நிறுவனத்தில் மாலை அல்லது இரவு நேரத்தில் பணியாற்றி வருவது தான் மூன்லைட்டிங் முறை ஆகும். சமீப காலமாக இந்த மூன்லைட்டிங் முறை இந்திய ஐடி துறையில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மற்ற துறைகளில் மூன்லைட்டிங் முறைக்கு எதிர்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், ஐடி துறையில் முக்கிய தகவல்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதுகின்றனர்.

முன்னதாக விப்ரோ & இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்துள்ள நிலையில், தற்போது Happiest Minds Technologies நிறுவனமும் மூன்லைட்டிங் செய்த ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. மூன்லைட்டிங் செய்வது தங்கள் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை மீறுவதாக இருப்பதால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் ஜோசப் ஆனந்தராஜு, ஊழியர்கள் வார இறுதியில் ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க விரும்புவதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், மற்ற செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். நேரடியாக அலுவலகத்திற்கு ஊழியர்கள் வரும் போது மூன்லைட்டிங் செய்ய முடியாது. இதற்காக ஊழியர்கள் படிப்படியாக நேரடியாக அலுவலக பணிக்கு அழைக்கப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!