முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா? ரசிகர்கள் ஷாக்!

0
முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர்
முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர்
முதல் ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போட்டியாளர் இவரா? ரசிகர்கள் ஷாக்!

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இன்றுடன் 5 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த வாரம் யார் வெளியேறுவார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பிக் பாஸ் எலிமினேஷன்:

சின்னத்திரையில் பல ரசிகர்களை கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அதில் 20 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இது மற்ற சீசன்களை போல இல்லை வித்தியாசமானது என பிக் பாஸ் சொல்ல, முதல் நாளே போட்டியாளர்களிடம் சண்டையை மூட்டும் படி டாஸ்க் கொடுக்கிறார். அதை எல்லாம் தாண்டி அனைவரும் சந்தோசமாக இருப்பது போல காட்டிக் கொண்டார்கள்.

ஆனால் அதெல்லாம் 2 நாட்கள் கூட தாக்கு பிடிக்கவில்லை. அசிம், மகேஸ்வரி ஒரு பக்கம் சண்டையிட, தனலட்சுமி, ஜிபி முத்து மறுபக்கம் சண்டை போட்டுக் கொள்கின்றனர். அதனால் ஜிபி முத்து பயங்கரமாக அழுகிறார். இந்நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் ஆயீஷா, விக்ரமன், அசீம், ஜிபி முத்து இருக்கின்றனர். ஆனால் இந்த வார இறுதிக்குள் அதில் மாற்றம் வரலாம். மேலும் ஜிபி முத்துவிற்கு வெளியே ஏகப்பட்ட ஆதரவு இருக்கும் நிலையில், அவர் கண்டிப்பாக டைட்டில் வாங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

நீ உலகத்துல வாழவே கூடாது.. கோவத்தின் உச்சத்தில் கோபியை கொலை செய்ய துணியும் மூர்த்தி!

Exams Daily Mobile App Download

மேலும் தனலட்சுமி அடிக்கடி யாருடன் ஆவது சண்டை போட்டுக் கொண்டே இருப்பதால் அவர் நாமினேஷனில் வந்தால் கண்டிப்பாக அவரை ரசிகர்கள் வெளியே அனுப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முதல் வாரமே எலிமினேஷன் இருக்காது என்ற பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் இருந்து வருகிறது. இன்று வெளியான ப்ரோமோவில் கூட ஜனனி, ஜிபி முத்து புகார் சொன்னதாக சொல்லி தனலட்சுமியை வெளியே தூங்க சொல்ல, ஆனால் உடனே அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கவே கூடாது என சொல்லி அழுகிறார். பொறுத்து இருந்து பார்ப்போம் யார் முதல் வாரம் வெளியேற போகிறார்கள் என்று..

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!