தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை – ஆக.31க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம்!

0
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை - ஆக.31க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம்!
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை - ஆக.31க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம்!
தமிழகத்தில் வேலை இல்லாதோருக்கான உதவித்தொகை – ஆக.31க்குள் விண்ணப்பிக்க கால அவகாசம்!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகையை வழங்க உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

உதவித்தொகை

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை குறித்த அறிக்கையை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகையை பெற 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி, இதற்கும் மேற்பட்ட கல்வித்தகுதி உடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து 5 ஆண்டுகள் நிறைவடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் மாற்றுத்திறனாளிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின இனத்தை சேர்ந்த விண்ணப்பத்தார்கள் 30.9.2022 அன்றைய நிலவரப்படி 45 வயதிற்குட்ப்பட்டவராக இருக்க வேண்டும். இதே போல் மற்ற வகுப்பை சேர்ந்தவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். இந்த உதவித்தொகை திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தோல்வி அடைந்தவா்களுக்கு 200 ரூபாயையும் , பத்தாம் வகுப்பு தோ்ச்சி அடைந்தவா்களுக்கு 300 ரூபாயையும், மேல்நிலைக் கல்வி தோ்ச்சி அடைந்தவா்களுக்கு 400 ரூபாயையும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரியை வீட்டை விட்டு வெளியேற்றும் ராதிகா, கோவப்படும் பாக்கியா – திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி!

இதனை தொடர்ந்து பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்றவராக இருப்பின் ரூ.600 மற்றும் 10ம் வகுப்பு தோல்வி, தோ்ச்சி, மேல்நிலை கல்வி தோ்ச்சிக்கு, பட்டப்படிப்பு தோ்ச்சி பெற்று மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் அவர்களுக்கு முறையே ரூ, 600, ரூ.750, ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பத்தை பெற விண்ணப்பதாரர்கள் தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை காண்பித்து பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் விண்ணப்பத்தை வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!