சன் டிவி “சுந்தரி” சீரியலில் அரங்கேற இருக்கும் பெரிய திருப்பம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

0
சன் டிவி
சன் டிவி "சுந்தரி" சீரியலில் அரங்கேற இருக்கும் பெரிய திருப்பம் - ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
சன் டிவி “சுந்தரி” சீரியலில் அரங்கேற இருக்கும் பெரிய திருப்பம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!

சன் டிவி “சுந்தரி” சீரியலில் பல சுவாரஸ்யமான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கார்த்திக் வீட்டு பக்கம் திருவிழா ஒன்று வர அதற்கு சுந்தரியையும் கார்த்திக்கையும் அழைக்கின்றனர். அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

சுந்தரி சீரியல்:

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். பல வெற்றி சீரியல்களை கொடுத்த சன் டிவியில் தற்போது புதுமைக்கு பஞ்சம் இல்லாமல் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. பூவே உனக்காக, மகராசி, திருமகள், சித்தி 2, பாண்டவர் இல்லம், சந்திரலேகா, அருவி, தாலாட்டு, அபியும் நானும், கயல், வானத்தை போல, கண்ணான கண்ணே, ரோஜா, எதிர் நீச்சல், அன்பே வா என TRPயில் போட்டி போட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்டு TRPயில் பெரிய சாதனை செய்யும் சீரியல் தான் “சுந்தரி”. பொதுவாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் சீரியல்களுக்கு மவுசு அதிகம். சுந்தரி சீரியல் கருப்பாக இருக்கும் கிராமத்து பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் முதலில் கிராமத்து பெண் தோரணையில் காட்டப்பட்ட கதாநாயகி தற்போது அலுவலகத்தின் CEO ஆனதால் மாடல் லுக்கில் என்ட்ரி கொடுத்தார்.

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு? முதல்வருக்கு கோரிக்கை!

அதனை தொடர்ந்து தற்போது புது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கார்த்தியின் அக்கா கணவரான முருகன், கார்த்தியின் நெருங்கிய நண்பனான கிருஷ்ணாவிற்கு போன் செய்து ‘ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு வந்து சேந்துரு உன் ஆருயிர் தோழர் அவரையும் வர சொல்லிரு. வீட்டுக்காரரை கூட்டிட்டு அனுவையும் வர சொல்லிடு’ என்று தகவல் சொல்கிறார். இதை கேட்கும் கிருஷ்ணா, “இந்த திருவிழாவில் பூஜை சாமிக்கு இருக்கோ, இல்லையோ உனக்கு இருக்குடா” என்று கார்த்திக்கை மனதில் நினைத்து கொண்டு திட்டுகிறார். பின் சுந்தரிக்கு போன் செய்த கார்த்திக்கின் அக்கா ‘முதல் காப்பு உனக்கு தான் சீக்கிரம் வந்து சேரு என கூறுகிறாள்’. அப்போது அங்கே இருக்கும் பாட்டி மற்றும் சித்தார்த்திடம் விவரத்தை கூறி விட்டு, சித்தார்த்தை பார்த்து நீயும் வா என சுந்தரி சொல்ல உடனே சித்தார்த் ‘உன் வீட்டுக்காரர் வருவாருல்ல நானும் வரேன் என விவரம் தெரியாமல் சொல்கிறார். அதனால் கார்த்திக் கண்டிப்பாக மாட்டிக் கொள்ள போவது உறுதியாகி விட்டது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!