தமிழ் & சரஸ்வதி திருமணத்தை நிறுத்துவதாக சபதம் எடுக்கும் சந்திரலேகா – விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!

0
தமிழ் & சரஸ்வதி திருமணத்தை நிறுத்துவதாக சபதம் எடுக்கும் சந்திரலேகா - விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!
தமிழ் & சரஸ்வதி திருமணத்தை நிறுத்துவதாக சபதம் எடுக்கும் சந்திரலேகா - விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!
தமிழ் & சரஸ்வதி திருமணத்தை நிறுத்துவதாக சபதம் எடுக்கும் சந்திரலேகா – விறுவிறுப்பாகும் அடுத்தகட்ட கதைக்களம்!

விஜய் டிவி ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் தமிழ் மற்றும் சரஸ்வதிக்கு நடைபெற இருக்கும் திருமணத்தை எப்படியாவது தடுத்தே தீருவேன் என்று சந்திரலேகா சவால் விடுவது போல வெளியாகி இருக்கும் ப்ரோமோ ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தமிழும் சரஸ்வதியும்

தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லாமல் வெளியாகி கொண்டிருக்கும் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் ஒரு முக்கியமான கட்டத்திற்கு வந்துள்ளது. இதுவரை, பல்வேறு ரகசியங்களை மறைத்து தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணத்தை நடத்த அனைவரும் முயற்சித்து கொண்டிருக்கும் வேளையில் அதை கெடுப்பதற்காகவும் சில சம்பவங்கள் அரங்கேறி கொண்டிருக்கிறது. அந்த வகையில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் சரஸ்வதியின் படிப்பை காரணம் காட்டி சந்திரலேகா திருமணத்தை நிறுத்த முயற்சிக்கும் போது, எப்படியோ தமிழ் அவரை காப்பாற்றி விடுகிறார்.

டாக்டர் மீது காதலில் விழுந்த “பாக்கியலட்சுமி” இனியா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இதனை தொடர்ந்து இந்த திருமண வைபோகம் நிச்சயதார்த்தம் வரை வர, தமிழ் மற்றும் சரஸ்வதி இருவரும் காதலித்த விஷயத்தை கூறி திருமணத்தை நிறுத்த ஒரு பிளான் போடுகிறார் லேகா. ஆனால் இந்த விஷயமும் கோதைக்கு தெரிந்திருக்க லேகா நினைத்தது இது நடக்காமல் போகிறது. இதற்கிடையில் தமிழ் மற்றும் சரஸ்வதி திருமணத்தில் மெஹந்தி, நிச்சயதார்த்தம் என பல்வேறு விஷயங்கள் இடம்பெற இதில் ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து அடுத்தடுத்து வெளியேறும் நடிகைகள் – இயக்குனர் ஆதங்கம்!

இப்படிப்பட்ட கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த திருமண வைபோகம் தொடர்பான ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணத்தை நிறுத்தியே தீருவேன், சரஸ்வதியை அந்த வீட்டிற்கு மருமகளாக அடியெடுத்து வைக்க விடமாட்டேன் என்று சந்திரலேகா சவால் விடுவது போல சில காட்சிகள் இடம் பிடித்திருந்தது. இப்போது தமிழ் மற்றும் சரஸ்வதியின் திருமணம் நடைபெறுமா அல்லது சந்திரலேகாவின் திட்டம் நிறைவேறுமா என்ற கோணத்தில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் விறுவிறுப்பாக வெளியாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!