விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் அடுத்த ட்விஸ்ட் – கோதையின் இறுதி நிமிடங்கள்!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் சரஸ்வதி படிக்கவில்லை என்ற உண்மை கோதைக்கு தெரியவர அவருக்கு உடல் நிலை சரி இல்லாமல் போகிறது. அதனால் கோதை சுயநினைவு இல்லாமல் இருக்கிறார். இந்நிலையில் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது
தமிழும் சரஸ்வதியும் சீரியல்:
தமிழும் சரஸ்வதியும் சீரியலில் அனைவரும் எதிர்பார்த்தது போல தமிழ் சரஸ்வதி திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.ஆனால் திருமணம் முடிந்த கையோடு கோதைக்கு சரஸ்வதி பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது. சரஸ்வதி 12 ஆம் வகுப்பு பையில் என தெரிந்து கோதை கோமா நிலைக்கு செல்கிறார். அதனால் குடும்பமே வருத்தத்தில் இருக்கிறது. இந்நிலையில் கோதை மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் சீசன் 2வில் களமிறங்கும் நடிகை நதியா – ப்ரோமோ ரிலீஸ்!
அதனால் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை வாசலில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோதையின் பேக்ட்ரியில் பிரச்சனை வர அதை தமிழ் தான் சரி செய்கிறார். ஆனால் கோதையின் இந்த நிலைக்கு தமிழ் தான் காரணம் என்பதால் தமிழ் மற்றும் சரஸ்வதியை தமிழின் அப்பா மற்றும் தம்பி வெறுத்து ஒதுக்குகின்றனர். அதனால் சரஸ்வதி நான் ராசி இல்லாதவள் என நினைத்து அழுகிறார். மேலும் பல சண்டைகள் அந்த குடும்பத்திற்குள்ளே வர கோதை இல்லாமல் கஷ்டமாக இருக்கிறது.
குடித்துவிட்டு மீனாவிடம் காதலை சொல்லி கலாட்டா செய்த ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
மேலும் தமிழின் அப்பா சரஸ்வதியை தவறாக பேச அதனால் தமிழின் அப்பாவை சரஸ்வதியின் அப்பா அடிக்க போகிறார். அதை பார்த்த கார்த்திக் சரஸ்வதியின் அப்பாவை அடிக்க போக சரஸ்வதி தனது அப்பாவை அடிக்க போனதை பார்த்து கார்த்திக்கை அடிக்க போகிறார். இந்நிலையில் அப்போது வந்த தமிழ் கார்த்திக் சரஸ்வதியை தவறாக பேசுவதை பார்த்து கார்த்திக்கை அடிக்க வருகிறார். அதை பார்த்த கோதை வருத்தப்படுகிறார். அதனால் அவரது உடல்நிலை மோசமாகி மரணத்தை நெருங்குவதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் கோதை மீண்டு வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.