விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் குறித்த சீக்ரெட் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
விஜய் டிவி
விஜய் டிவி "தமிழும் சரஸ்வதியும்" சீரியல் குறித்த சீக்ரெட் தகவல் - ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியல் குறித்த சீக்ரெட் தகவல் – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் புதிதாக அறிமுகமாகி உள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழுக்கு அம்மாவாக நடிக்கும் நடிகை மீரா கிருஷ்ணனுக்கு ஹீரோவை விட வயது குறைவு என தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. பல புதிய திருப்பங்களுடன் புதுப்புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதனால் மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட TRPயில் முன்னணி இடங்களை விஜய் டிவி சீரியல் பிடித்துள்ளது. அதில் ஒரு சீரியலான தமிழும் சரஸ்வதியும் சீரியல் கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

இந்த நாடகத்தின் ஹீரோ தமிழ் (தீபக்) குடும்பத்தின் மூத்த மகன் ஆவார். குடும்பத்தில் அம்மா, அப்பா, தம்பி, தங்கை என உள்ளனர். அம்மாவின் பிசினஸ் கவனித்து கொள்ளும் பொறுப்பான மகனாக உள்ளனர். அதேபோல அம்மா சொல்படி கேட்கிற மகனாகவும் இருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக அவர் 10 ஆம் வகுப்பு படிக்காமல் உள்ளார். ஆனால் அவரது தங்கை மற்றும் தம்பி நன்றாக படித்துள்ளார். இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் நடிகை நட்சத்திரா அவரும் 12வது பாஸ் பண்ண முடியாமல் திணறி வருகிறார். இருவருக்கும் இடையே காதல் வருகிறது.

பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் – குவியும் லைக்குகள்!

ஆனால் இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக வெளியே சொல்லாமல் இருக்கின்றனர். படிப்பு என்கிற ஒரு விஷயமே இவர்கள் இருவருக்கும் ஒரே மாதிரி நேர்கோட்டில் சந்திக்க செய்கிறது. படிப்பு குறைவு என்கிற ஒரு காரணத்தாலேயே பல்வேறு அவமானங்களை இவர்கள் சந்திப்பதெல்லாம் கதையில் அடுத்தடுத்து நடக்கின்றன. இந்நிலையில் இந்த சீரியல் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த சீரியலில் தமிழுக்கு அம்மாவாக நடிக்கும் மீரா கிருஷ்ணனின் வயது, ஹீரோவாக நடிக்கும் தீபக் வயதை விட குறைவு, தீபக்கின் வயது 41 ஆனால் அவரது அம்மாவாக நடிப்பவர் வயது 36 என தகவல் வெளியாகி உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!