பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

0
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக நாகர்ஜுன் வாங்கும் சம்பளம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் நாகர்ஜுனாவிற்கு வழங்கப்படும் சம்பளம் குறித்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று முதல் பிக் பாஸ் 5 சீசன் தெலுங்கில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி:

பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. 100 நாட்கள் ஒரே வீட்டில் நடிகர் மற்றும் நடிகைகள் இருப்பர். அவர்கள் அனைவருக்கும் டாஸ்க் கொடுக்கப்படும். அதனை வெற்றிகரமாக முடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றவர் தான் வெற்றியாளராக மாறுவர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. இந்த நிகழ்ச்சி முதன் முதலாக இந்தியில் தான் ஒளிபரப்பப்பட்டு வந்தது.

பாரதி கண்ணம்மா பழைய அகிலனின் போட்டோஷூட் – குவியும் லைக்குகள்!

பின்னர், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. நேற்று தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியில் இந்த முறை நடிகை ப்ரியா, லோபோ, மானஸ், நடிகை ஹமிதா, பிரியங்கா சிங், சரயு, நட்ராஜ், ஸ்வேதா வர்மா, ஆர்.ஜே. காஜல், உமாதேவி, விஸ்வா, ஷண்முக் ஜஸ்வந்த், மாடல் ஜெஸ்ஸி, லாஹரி சாரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சீமந்த நிகழ்வில் நெகிழ்ச்சியான ‘பாரதி கண்ணம்மா’ பரினா – வைரலாகும் வீடியோ!

கடந்த மூன்று சீசன்களை தெலுங்கு நடிகரும், தயாரிப்பாளருமான நாகர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் இந்த நிகழ்ச்சிக்காக 12 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என்ற தகவல் கடந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் போது கூறப்பட்டது. தற்போது இந்த சீசனை தொகுத்து வழங்க 15 சதவீதம் சம்பளம் அதிகரித்து தருமாறு கேட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த தகவல் நாகர்ஜுன் தரப்பில் இருந்தோ அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாடு தரப்பிலிருந்தோ கூறப்படவில்லை. ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் நடிகர் சல்மான் கானுக்கு கொடுக்கும் சம்பளத்துடன் ஒப்பிடும்போது இது ஒரு விஷயமே கிடையாது என்று பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!