தமிழின் அம்மா மனதில் இடம் பிடிக்கும் சரஸ்வதி – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!

0
தமிழின் அம்மா மனதில் இடம் பிடிக்கும் சரஸ்வதி - வெளியான
தமிழின் அம்மா மனதில் இடம் பிடிக்கும் சரஸ்வதி - வெளியான "தமிழும் சரஸ்வதியும்" ப்ரோமோ!
தமிழின் அம்மா மனதில் இடம் பிடிக்கும் சரஸ்வதி – வெளியான “தமிழும் சரஸ்வதியும்” ப்ரோமோ!

விஜய் டிவி “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில், தமிழின் அம்மா கோவிலில் சரஸ்வதியை பார்த்து பிடித்திருப்பதாக சொல்கிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழும் சரஸ்வதியும்:

தமிழும் சரஸ்வதியும் சீரியலில், தமிழ் மற்றும் சரஸ்வதி ஒருவரை ஒருவர் காதலிப்பதை பகிர்ந்து கொள்கின்றனர். பின் சரஸ்வதி அவரது வீட்டிற்கு தமிழ் மற்றும் அவரது நண்பரை அழைத்து அவர் கையால் சமைத்து கொடுக்கிறார். அதை சாப்பிட்டு தமிழ் அருமையாக இருக்கிறது என சொல்கிறார். சரஸ்வதி வீட்டில் அவரது அப்பா நடப்பதை எல்லாம் பார்த்து என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார். தமிழிற்கு சரஸ்வதி மீது நாளுக்கு நாள் காதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

விஜய் டிவி ‘பிக் பாஸ்’ சீசன் 5 இல் ரெட் கார்டு வாங்கப்போகும் அபிஷேக்? நடந்தது என்ன!

இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் தமிழின் அம்மா சரஸ்வதியை கோவிலில் பார்க்கிறார். சரஸ்வதி அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் MBA என சரஸ்வதியை அவர் தோழி அழைக்க, அவர் MBA என்பது உன் படிப்பு தான என கேட்கிறார். உடனே சரஸ்வதி தோழி ஆமாம் என சொல்ல, வீட்டிற்கு வந்த அவர் அம்மா உன் கோவில் தோழியை பார்த்தேன் என தமிழிடம் சொல்கிறார்.

தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி – வெளியான ப்ரோமோ!

எவ்வளவு நல்ல பெண்ணாக இருக்கிறாள். எவ்வளவு அடக்கம் உதவி செய்யும் எண்ணம், அனைவரிடமும் பாசத்துடன் பழகுகிறாள் என சொல்கிறார். உடனே தமிழ் சரஸ்வதிக்கு போன் செய்து என் அம்மா மனதில் இடம் பிடித்து விட்டாய் என சொல்ல, ஆரம்பமே பொய்யில் ஆரம்பிக்க கூடாது என சரஸ்வதி சொல்கிறார். நம்ம கல்யாணம் கண்டிப்பாக நடக்குமா என சரஸ்வதி கேட்க, இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி நாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் நிச்சயம் நம்ம கல்யாணம் நடக்கும் என தமிழ் சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!