தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி – வெளியான ப்ரோமோ!

0
தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி - வெளியான ப்ரோமோ!
தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி - வெளியான ப்ரோமோ!
தாமரை செல்விக்கு ஆதரவாக நிற்கும் போட்டியாளர்கள், அதிருப்தியில் இமான் அண்ணாச்சி – வெளியான ப்ரோமோ!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் தாமரை செல்வியை காப்பாற்றுவதற்காக பலர் முன் நிற்கும் போது இமான் அண்ணாச்சி தனது வருத்தத்தை தெரிவிப்பது போல புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் ப்ரோமோ

விஜய் டிவியில் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக 2வது வாரத்தை கடந்து 3வது வாரத்திற்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஆரம்பத்தில் சுமார் 18 போட்டியாளர்களுடன் களம் கண்ட ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் மட்டுமே கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த வார துவக்கத்தில் எலிமினேஷனுக்கான நாமினேஷன் பிராசஸ் கலகலப்புடன் நடைபெற்றது. இதையடுத்து இன்றைய நாளுக்கான எபிசோடில் லக்ஸுரி பட்ஜெட் டாஸ்குகள் நடந்தேறியுள்ளது.

‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ – வாழ்த்தும் ரசிகர்கள்!

இப்போது ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய எபிசோடுக்கான புதிய ப்ரோமோ ஒன்று தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அதில் சின்னப்பொண்ணு மற்றும் தாமரை செல்வியை காப்பாற்ற போட்டியாளர்கள் தங்களது கருத்துக்களை கூறுகின்றனர். அப்போது, போட்டியாளர் அபிஷேக் தாமரை செல்வியை காப்பாற்றுவதாக கூற அதை கேட்ட அவர் அழுதுகொண்டே அபிஷேக்கின் காலில் விழுகிறார்.

ஆட்டோ ஓட்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

மறுபக்கத்தில் இமான் அண்ணாச்சி கேட்ட கேள்விக்கு தான் தாமரைச் செல்வியை காப்பாற்றுவதாக ராஜு கூறுகிறார். பிறகு பிரியங்காவும் தாமரை செல்வியை காப்பாற்றுவதாக கூற, எல்லாரும் தாமரைச் செல்வி பக்கம் இருப்பதனால் யாரு சின்னப் பொண்ணுவை காப்பாற்றுவது என இமான் அண்ணாச்சி கேட்கிறார். அப்போது பிரியங்கா, தான் சின்னப் பொண்ணுவை நாமினேட் செய்திருப்பதாக அண்ணாச்சியிடம் கூறுவது போல சில காட்சிகள் புதிய ப்ரோமோவில் வெளியாகி இருக்கிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!