‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ – வாழ்த்தும் ரசிகர்கள்!

0
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ - வாழ்த்தும் ரசிகர்கள்!
'பாரதி கண்ணம்மா' நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ - வாழ்த்தும் ரசிகர்கள்!
‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினாவின் லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ – வாழ்த்தும் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை பரினா ‘முதல்வன்’ திரைப்படத்தில் வரும் காதல் காட்சி ஒன்றை வைத்து செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

மீடியா உலகில் ஒரு விஜேவாக அடியெடுத்து வைத்து தற்போது சின்னத்திரையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பிடித்திருப்பவர் ‘பாரதி கண்ணம்மா’ நடிகை பரினா. சாதாரண டிவி சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த பரினாவுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ‘அஞ்சறைப்பெட்டி’ நிகழ்ச்சி நல்ல ரீச்சை கொடுத்தது. இதை வைத்து படிப்படியாக முன்னேறிய பரினா தற்போது விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் தவிர்க்க முடியாத ஒரு இடத்தை பெற்றுள்ளார்.

ஆட்டோ ஓட்டும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ!

நிஜத்தில் ஜாலியான சுபாவம் கொண்ட பரினாவுக்கு இந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் சிறந்த வில்லி என்ற அடையாளத்தை பெற்று தந்திருக்கிறது. இவரது வில்லத்தனத்தின் மூலம் மக்களால் அதிகம் பேசப்படும், ரசிக்கப்படும் நடிகையாக பரினா இருந்து வருகிறார். இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை பரினா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் நடிப்பின் மீது கொண்டிருக்கும் ஆர்வம் காரணமாக ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இன்று வரையும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தன் குழந்தையை கொஞ்சி விளையாடிய தனம் – இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோ!

எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பரினா அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்கள், ரீல்ஸ் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, ‘முதல்வன்’ திரைப்படத்தில் நடிகை மனிஷா கொய்ராலா மற்றும் அர்ஜுன் நடித்துள்ள காதல் காட்சிகளில் வரும் வசனங்களை பேசி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல நடிகை பரினாவின் பதிவுக்கு லைக் செய்து வரும் ரசிகர்கள் அவரது பிரசவத்துக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!