IND vs SA முதல் டெஸ்ட்: ஷமியின் சிறப்பான பந்து வீச்சு – தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்!

0
IND vs SA முதல் டெஸ்ட்: ஷமியின் சிறப்பான பந்து வீச்சு - தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்!
IND vs SA முதல் டெஸ்ட்: ஷமியின் சிறப்பான பந்து வீச்சு - தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்!
IND vs SA முதல் டெஸ்ட்: ஷமியின் சிறப்பான பந்து வீச்சு – தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறல்!

தென் ஆப்பிரிக்கா, இந்திய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி தற்போது நடந்து கொண்டு வருகிறது. 3 வது நாளான இன்று முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்கள் திணறி வருகின்றனர்.

முதல் டெஸ்ட்:

செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்டின் 3வது நாளில் இந்திய அணி 105.3 ஓவர்கள் பேட்டிங் செய்து 327 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக இங்கிடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ககிசோ ரபாடா ஆரம்பத்தில் விக்கெட் எதுவும் எடுக்காமல் இருந்த நிலையில் இன்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இன்று தொடக்கத்திலேயே கே.எல் ராகுல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். மிடில் ஆர்டரில் யாரும் தாக்குப்பிடிக்காத நிலையில் இந்தியா 2வது செஷனில் ஆல் அவுட் ஆனது

தோழிகளுடன் சேர்ந்து சுற்றுலா சென்ற ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி – குவியும் லைக்குகள்!

மதிய உணவுக்குப் பிறகு களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை கொடுத்து தற்போது 4 விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் விளையாடி வருகிறது. முகமது ஷமி இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர். பும்ராவிற்கு காயம் ஏற்பட்டதால் அவர் பந்து வீச முடியாமல் ஒய்வு அறைக்கு சென்றுள்ளார்.

இன்று முதல் மினி ஊரடங்கு அமல் – பள்ளி & கல்லூரிகள் மூடல், புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!

தற்போது தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. தென் ஆப்பிரிக்க ஒரு நாள் மற்றும் T20 கேப்டன் பாவுமாவும், விக்கெட் கீப்பரான டி-காக்கும் காலத்தில் உள்ளனர். 30 ஓவர் முடிந்த நிலையில் இன்னும் இரண்டு செஷன் மீதம் உள்ளது. இந்த முறை இந்தியா தென் ஆப்பிரிக்காவில் தொடரை கைப்பற்றும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!