பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனில் இடமளிக்க கூடாது – இந்தியாவின் கோரிக்கை!

0
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனில் இடமளிக்க கூடாது - இந்தியாவின் கோரிக்கை!
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனில் இடமளிக்க கூடாது - இந்தியாவின் கோரிக்கை!
பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கனில் இடமளிக்க கூடாது – இந்தியாவின் கோரிக்கை!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகளுக்கு இடம் அளிக்கக் கூடாது என்று இந்தியா தாலிபான்களிடம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்தியாவின் கோரிக்கை:

ஆப்கானிஸ்தான் நாட்டில் மக்களாட்சி செய்து வந்த அதிபர் அஷ்ரப் கானி தாலிபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் அடைந்தார். இதனால் ஆப்கனில் அதிகாரப்பூர்வ ஆட்சி அமைய உள்ளது. ஆப்கனில் தாலிபான்களின் அதிகாரம் ஓங்கிய பின்னர் இந்தியா ஆப்கன் நிலவரத்தை தொடர்ந்து உன்னிப்பாக கவனிக்க தோடங்கியது. காரணம் தாலிபான்களின் ஆதரவு நாடான பாகிஸ்தான் ஆப்கனில் இந்தியாவிற்கு இருந்து வரும் உறவை தடுக்க சதி செய்ய முற்படலாம் என்பது தான்.

குழந்தைகள் மீது டெல்டா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு – அமெரிக்க நோய் தடுப்பு மையம்!

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலர் ஹர்ஷ் வர்தன் மூன்று நாள் பயண மாக அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் அன்டோனி பிளிங்கனை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பிற்கு பின்னர், இந்திய வெளியுறவுத்துறை செயலர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, சமீபத்தில் கத்தார் நாட்டிற்கான இந்திய துாதர் தீபக் மிட்டல், தலிபான் அரசியல் தலைவர் ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானக்ஸ் உடன் பேச்சு நடத்தினார்.

TN Job “FB  Group” Join Now

அதில், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆப்கனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து உள்ளதாக கூறினார். மேலும் ஆப்கனில் உள்ள பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரின் சம உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். அப்போது இந்தியாவின் கவலையில் உள்ள நியாயம் கவனத்தில் கொள்ளப்படும் என ஷெர் முகமது தெரிவித்தார். இந்தியா தலைமையில் நடந்து முடிந்த ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ‘பாக்.,கில் செயல்படும் ஜெய்ஷ் – இ – முகமது, லஷ்கர் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கன் இடமளிக்கக் கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து தொடர்ந்து அழுத்தம் – மதுரை எம்.பி. வெங்கடேசன்!

ஆப்கனில் பயங்கரவாதிகளுக்கு இடமளிக்கமாட்டோம் என்று தாலிபான்கள் அமெரிக்காவிற்கு உறுதி அளித்துள்ளனர். இவர்களின் நடவடிக்கையினை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இரு தரப்பு பேச்சுஇந்திய – அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர்கள், ராணுவத் துறை அமைச்சர்கள் நவம்பரில் வாஷிங்டனில் சந்தித்து பேச உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!