ஜனவரி மாதத்தில் 3,300 பேரை வேலை நீக்கம் செய்த 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் – வெளியான அப்டேட்!

0
ஜனவரி மாதத்தில் 3,300 பேரை வேலை நீக்கம் செய்த 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் - வெளியான அப்டேட்!
ஜனவரி மாதத்தில் 3,300 பேரை வேலை நீக்கம் செய்த 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் – வெளியான அப்டேட்!

உலகளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலை காரணமாக பல தொழில் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் சராசரியாக 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் 3,300க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது

ஊழியர்கள் பணி நீக்கம்

கொரோனா ஊரடங்கு பல உலக நாடுகளின் பொருளாதார நிலைமையை புரட்டி போட்டுள்ளது. அதனால் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் வேலை வாய்ப்பை குறைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இந்த ஆண்டானது தொழில்நுட்ப பணியாளர்களுக்கு மோசமான ஆண்டாக இருக்கிறது. இது குறித்து IANS இன் அறிக்கையின்படி உலகளவில் ஜனவரி மாதத்தில் கிட்டத்தட்ட 1 லட்சம் தொழில்நுட்ப வல்லுநர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த தொழில்நுட்ப பணிநீக்கங்கள் பெரும்பாலும் Amazon, Microsoft, Google, Salesforce போன்ற பெரிய நிறுவனங்களாக இருக்கின்றன.

பிப்.9 வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே தொடரும் – வானிலை அறிக்கை!

Follow our Instagram for more Latest Updates

உலகம் முழுவதும் சராசரியாக 288க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் தினமும் 3,300 பேரை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் ஜனவரி மாதத்தில் அமேசான் 18,000 பரையும் , கூகுள் 12,000 பேரையும் மற்றும் மைக்ரோசாப்ட் 10,000 பேரையும் வேலை நீக்கம் செய்துள்ளது. இதற்கிடையில், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற பிற நிறுவனங்கள் 7,000 பணிநீக்கங்களை அறிவித்தது. ஃபேஸ்புக் தாயான மெட்டாவின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் 2023 இல் 11,000 பணிநீக்கங்களை அறிவித்தார்.

வேலை நீக்கம் குறித்து அறிவித்த பிறகு, 2023 ஆம் ஆண்டை “செயல்திறன் ஆண்டாக” இருக்க வேண்டும் என்று ஜுக்கர்பெர்க் விரும்புவதாக தெரிவித்துள்ளார் . மேலும் பணிநீக்க கண்காணிப்பு தளமான Layoffs.fyi இன் அறிவிப்பின் படி 1,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 2022 இல் 154,336 வேலை நீக்கம் செய்துள்ளது. 2022 மற்றும் 2023 க்கு இடையில் செய்யப்பட்ட மொத்த தொழில்நுட்ப பணி நீக்கங்களின் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!