
தமிழகத்தில் 25 லட்சம் இளைஞர்களை தொழில்நுட்ப வல்லுநராக்க திட்டம் – 2030 ஆண்டிற்குள் அரசு இலக்கு! அமைச்சர் பேட்டி!
தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 25 லட்சம் இளைஞர்களை தொழில்நுட்ப வல்லுநராக்க அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தகவல் தொழில்நுட்பத் துறை மாநாட்டை தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கான்பெடரேஷன் ஐ.டி. அசோசியேசன் தொழில் முனைவோர் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த அமைப்பினர் சேவை மட்டும் செய்யாமல் தீர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
ஜனவரி மாதத்தில் 3,300 பேரை வேலை நீக்கம் செய்த 288 தொழில்நுட்ப நிறுவனங்கள் – வெளியான அப்டேட்!
விவசாயம், போலீஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவாலான விஷயங்கள் உள்ளது. ஆனால் இந்த தகவல் தொழில்நுட்ப துறை மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளிலும் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தொழில்நுட்பத் துறையுடன் ஒருங்கிணைந்த முறை தேவை என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர் தமிழகத்தில் 2030 ஆம் ஆண்டுக்குள் 25 லட்சம் இளைஞர்களை தகவல் தொழில்நுட்பத் துறையில் பயிற்சி பெற்றவர்களாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். அதற்காக தொழில்நுட்ப பூங்காக்களை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த முடியாது என்பதால் தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் தகவல் தொழில்நுட்ப பயிற்சி வழங்க, ஊரக பகுதிகளில் அனைத்து வகையான கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.