TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தற்போது MBA பட்டதாரிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ள நிலையில் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.

வேலை வாய்ப்புகள்

மென்பொருள் நிறுவனங்களில் வேலை தேடும் பட்டதாரிகளுக்கு உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமீப காலமாக ஆஃப்-கேம்பஸ் டிஜிட்டல் பணியமர்த்தல் 2022, ஸ்மார்ட் பணியமர்த்தல் 2022, எம்பிஏ பணியமர்த்தல் 2022 போன்ற திட்டங்கள் மூலம் அதிகளவிலான புதியவர்களை பணியமர்த்தும் பணியில் ஈடுபட்டு வரும் TCS நிறுவனம், இப்போது MBA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது.

TNPSC குரூப் 4 VAO தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு 2022 – பாடத்திட்டம் & முழு விபரம் இதோ!

அந்த வகையில் இப்பதவிக்கு எம்பிஏ மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலக்கெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இந்த TCS MBA பணியமர்த்தல் திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. அந்த வகையில் பதிவை வெற்றிகரமாக முடித்த விண்ணப்பதாரர்களுக்கு டிசிஎஸ் தேர்வின் விவரங்கள் வெளியிடப்படும். இந்த செயல்முறைக்கு 2022 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தவிர 2022ல் எம்பிஏ தேர்ச்சி பெற்றவர்களும் அதாவது இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கான கல்வித்தகுதியை பொருத்தளவு, முதுகலை வணிக நிர்வாகம், முதுகலை மேலாண்மை படிப்புகள், முதுகலை டிப்ளமோ, முதுகலைப் பட்டம், நிதி, செயல்பாடுகள் வழங்கல் சங்கிலி மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், பொது மேலாண்மை, வணிக பகுப்பாய்வு, திட்ட மேலாண்மை ஆகும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்ப முறை:

  • இப்போது TCS MBI பணியமர்த்தல் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tcs.com/careers/management-hiring-yop-2020-2022 என்ற இணைப்பை திறக்க வேண்டும்.
  • முகப்பு பக்கத்தில் உள்ள விவரங்களை படித்த பிறகு, அடுத்த இணைப்பை கிளிக் செய்யவும்.
  • பின்னர் Register Now என்பதைக் கிளிக் செய்யவும்.
  • தொடர்ந்து IT ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
  • முன் பதிவு செய்தவர்கள் நேரடியாக உள்நுழைந்து விண்ணப்பிக்கலாம்.
  • சோதனை ரிமோட்டின் பயன்முறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • அனைத்து விவரங்களையும் சரிபார்த்தவுடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
  • விண்ணப்ப நிலையை சரிபார்க்க விண்ணப்பத்தை கண்காணிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!