TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

0
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - முழு விவரம் இதோ!
TCS நிறுவனத்தில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!

இந்தியாவின் முதன்மை தொழில்நுட்ப நிறுவனமான TCS, தற்போது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான வளாகத்திற்கு வெளியே ஆட்சேர்ப்பு இயக்கத்தின் 2வது கட்டத்தைத் தொடங்குகிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

வேலை வாய்ப்பு

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை அறிவித்தது. இந்த செயல்முறை மூலம் ஆயிரக்கணக்கான புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இதன் முதற்கட்ட வேலைவாய்ப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது பொறியியல் மாணவர்களுக்கான 2ம் கட்ட வேலைவாய்ப்பு அறிவிப்புகளை TCS நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் – முதல்வர் ஆலோசனை!

அதன் படி, 18 முதல் 28 வயதுக்குட்பட்ட கடந்த 2020-21ம் ஆண்டில் பட்டம் பெற்ற பொறியியல் பட்டதாரிகள் TCS நிறுவனத்தின் இந்த வேலைவாய்ப்புகளில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TCSன் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் விண்ணப்ப படிவங்களை செலுத்தலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக ஆர்வமும், தகுதியும் உடையவர்கள் வரும் ஜனவரி 16ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை செலுத்த வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

தகுதி:

  • 2020ம் ஆண்டில் BE, ME, B.Tech, M.Tech, MCA மற்றும் MBA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
  • விண்ணப்பதாரர்கள் 10, 12, பட்டப்படிப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு பாடங்களிலும் 6 CGPA அல்லது 60%க்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்.
  • கல்வியில் ஓரேயொரு பின்னடைவுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.
தேர்வு முறை:
  • இந்த பணிக்கான தேர்வு செயல்முறை 2 வழிகளில் நடத்தப்பட இருக்கிறது.
  • முதலாவதாக A பிரிவு எண், வாய்மொழி, பகுத்தறிவு கேள்விகளுடன் 2 மணி நேரத்திற்கு தேர்வுகள் நடத்தப்படும்.
  • தொடர்ந்து B பிரிவில், புரோகிராமிங், லாஜிக் மற்றும் கோடிங் குறித்த கேள்விகளுடன் 1 மணி நேரம் என மொத்தம் 3 மணி நேரத்திற்கு தேர்வுகள் நடத்தப்படும்.
விண்ணப்ப முறை:
  • முதலாவதாக TCS நிறுவனத்தின்  tcs.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் IT என்ற பிரிவை தேர்வு செய்து அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பவும்.
  • இப்போது விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!