TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – முக்கிய விபரங்கள் இதோ!

0
TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு - முக்கிய விபரங்கள் இதோ!
TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு - முக்கிய விபரங்கள் இதோ!
TCS, Infosys, HCL Tech ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு – முக்கிய விபரங்கள் இதோ!

டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் மற்றும் பிற ஐடி நிறுவனங்களும் அடுத்து வர இருக்கும் புதிய ஆண்டில் தங்கள் நிறுவனத்தின் திறனை அதிகரிக்கும் வகையில் அதிக அளவிலான ஊழியர்களை பணி அமர்த்த உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் அதற்கான இலக்கையும் நிர்ணயித்துள்ளது.

வேலைவாய்ப்பு:

கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தின் விளைவால் உலகளாவிய பொருளாதார சரிவால் பல நிறுவனங்கள் மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூடப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் திறப்பதற்கும் நிலைமையை மேம்படுத்துவதற்கும் உலகமும் முழு வேகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் விளைவால் பல நாடுகளின் பொருளாதாரம் மெதுவாக மீண்டும் முன்னேறத் தொடங்கியுள்ளது. ஆனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் துறை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

தமிழகத்தில் DEE தேர்வு முடிவுகள் நவ.29ம் தேதி வெளியீடு – மறுகூட்டல் விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!

இதனால் முன்னணி நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் பணி திறனை அதிகரிக்கும் வகையில் அடுத்த ஆண்டில் அதிக அளவிலான ஊழியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒவ்வொரு நிறுவனத்தின் இலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் மற்றும் பிற ஐடி நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணியமர்த்த உள்ளதால் ஐடி வேலை தேடுபவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தியாக உள்ளது. சமீபத்தில், TCS, Infosys, HCL ஆகியவை இந்த நிதியாண்டில் முறையே குறைந்தபட்சம் 77,000, 45,000 மற்றும் 22,000 புதிய பட்டதாரிகளை பணியமர்த்துவதாக அறிவித்தது.

வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

நவம்பர் 19 ம் தேதி நடந்த மெய்நிகர் முதலீட்டாளர் தினத்தின் போது, விப்ரோவின் தலைவர் & சிஎச்ஆர்ஓ, சௌரப் கோவில், தற்போது விப்ரோவில் 2,21,000 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 17,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தும் என்றும், அடுத்த ஆண்டில் குறைந்தது 25,000 பேரை வேலைக்கு அமர்த்தும் என்றும் கூறியுள்ளார். மேலும், புதிதாக பணியர்த்தும் பொறியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து பணியாற்ற சிறந்த கற்றல் மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை நிறுவனம் வழங்குகிறது என்றும் உயர் அதிகாரி கூறியுள்ளார். மேலும், ஊழியர்களுக்கு அடிப்படையிலான போனஸ் மற்றும் சம்பள உயர்வு போன்றவற்றையும் அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!