வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

0
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் 'ஒமிக்ரான்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் 'ஒமிக்ரான்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

கொரோனா வைரஸ் பல்வேறு விதங்களில் உருமாறி புதிய வகை கொரோனாவாக மாறுகிறது. அதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் பி.1.1.529 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் கொண்டது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

புதிய வகை கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸால் 3.45 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் மொத்தம் 4.67 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். அதனை தொடர்ந்து கொரோனா வைரஸின் 3- வது அலை தொடங்க உள்ளது. இந்நிலையில் வேகமாக பரவும் தன்மை வாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரான்’ என்பதை இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக் கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த வைரஸை “கவலைக்குரிய வைரஸ் வகை” என்ற பிரிவில் விஞ்ஞானிகள் சேர்த்துள்ளனர்.

தமிழகத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இந்த வைரஸ் 10 மடங்கு வீரியம் மிக்கதாக உள்ளது. இந்த வாரம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த புதிய வகையான கொரோனா வைரஸ் போட்ஸ்வானாவில், ஹாங்காங், இஸ்ரேலில் போன்ற நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸால் தென் ஆப்பிரிக்காவில் 6 பேர், போட்ஸ்வானாவில் 3 பேர், ஹாங்காங், இஸ்ரேலில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் பரவாமல் இருக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இனி கிடையாது? அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

அந்த கூட்டத்தில் விமான சேவைகளை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்ட்ன. அத்துடன் விமான பயணத்திற்கு முன்பாக பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பெற்றிருக்க வேண்டும். அதன் பின் விமான பயணிகள் இந்தியாவுக்கு வந்த பிறகு பரிசோதனையை தீவிரப்படுத்தல் போன்ற ஆலோசனைகளும் முன் வைக்கப்பட்டன. மேலும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பரவிய நாடுகளுக்கு விமான சேவையை உடனடியாக தடை செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here