ரூ.35,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

0
ரூ.35,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு - விரைவில் விண்ணப்பிக்கவும்..!
ரூ.35,000/- சம்பளத்தில் TANUVAS பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விரைவில் விண்ணப்பிக்கவும்..!

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Associate-I, II பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

TN Job “FB  Group” Join Now

நிறுவனம் Tamil Nadu Veterinary and Animal Sciences University (TANUVAS)
பணியின் பெயர் Project Associate-I, II
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 09.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) Project Associate-I, Project Associate-II பணிக்கு தலா 01 இடம் வீதம் மொத்தமாக 02 இடங்கள் காலியாக உள்ளது.

Project Associate-I, II கல்வி தகுதிகள்:

Project Associate பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Life Sciences பாடப்பிரிவில் M.V.Sc, Master Degree அல்லது Biotechnology போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Associate-I, II அனுபவ விவரம்:

Project Associate-II பணிக்கு 2 ஆண்டுகள் Research, Development போன்ற பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Project Associate-I, II வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

TANUVAS ஊதிய விவரம்:

Project Associate-I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Project Associate-II பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.28,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TANUVAS தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் 09.06.2022 அன்று நடைபெற உள்ள எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TANUVAS விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் இடம்:

TRPVB,
2nd Floor, Central University Laboratory Building, TANUVAS,
Madhavaram Milk Colony,
Chennai-600 051.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!