ரூ.1,75,000/- ஊதியத்தில் அரசு வேலை – 30+ காலிப்பணியிடங்கள்..!
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Associate Vice President, Project Lead, Project Associate பணிகளுக்கு என மொத்தமாக 36 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைவில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tamil Nadu Startup and Innovation Mission (TANSIM) |
பணியின் பெயர் | Associate Vice President, Project Lead, Project Associate |
பணியிடங்கள் | 36 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.05.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) பணியிடங்கள்:
தமிழ்நாடு ஸ்டார்ட்-அப் மற்றும் இன்னோவேஷன் மிஷனில் (TANSIM) காலியாக உள்ள Associate Vice President பணிக்கு என 04 இடமும், Project Lead பணிக்கு என 09 இடமும், Project Associate பணிக்கு என 23 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
AVP, PL, PA கல்வி விவரம்:
இப்பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பிரிவுகளில் Graduation, Post Graduation Degree-யை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AVP, PL, PA அனுபவ விவரம்:
Associate Vice President பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 10 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Project Lead பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 6 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Project Associate பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தபட்சம் 2 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
AVP, PL, PA வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
TANSIM ஊதிய விவரம்:
Associate Vice President பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,75,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Project Lead பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.75,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Project Associate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,000/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
TANSIM தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Technical Interview மற்றும் HR Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
Exams Daily Mobile App Download
TANSIM விண்ணப்பிக்கும் வழிமுறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை கடைசி நாளுக்குள் (30.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.