தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

1
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

வடக்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி அதே பகுதியில் நீடிக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் இதன் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது.

வானிலை அறிக்கை:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய (திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி) மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

ஜூன் 14 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி – மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு!

14.06.2021, 15.06.2021 அன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் ஈரோடு, தருமபுரி, சேலம், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

TN Job “FB  Group” Join Now

16.06.2021, 17.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தின் 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஓட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் 5 செமீ, அதிராம்பட்டினம் 4செமீ, வேதாரண்யம், பரங்கிப்பேட்டை தலா 3 செமீ, பெரிய காலாபேட்டை, அவலாஞ்சி, பெரியாறு, ராசிபுரம், வானூர், சிவலோகம் தலா 2 செமீ, மணமேல்குடி, கீழ்பென்னாத்தூர், ஏற்காடு, தென்பறநாடு, பாபநாசம், மரக்காணம், மீமிசல், மயிலாடுதுறை தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

13.06.2021 முதல் 15.06.2021 வரை மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 13.06.2021 முதல் 15.06.2021 வரை கேரளா, கோவா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 13.06.2021 முதல் 17.06.2021 வரை அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் அவ்வப்போது 65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!