தமிழத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து தற்போது கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வானிலை தகவல்‌

கேரளா மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல மேலடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்பச்சலனம்‌ காரணமாக,

17.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை மாவட்டத்‌தின்‌ மலைப்பகுதிகளில்‌ (வால்பாறை) கன முதல்‌ மிக கனமழையும்‌, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌ பெய்ய வாய்ப்புள்ளது.

18.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, ஈரோடு, சேலம்‌, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல்‌, கரூர்‌, திருச்சி, வேலூர்‌, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Exams Daily Mobile App Download

19.05.2022: வட உள்தமிழகம்‌, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல்‌, புதுக்கோட்டை, கடலூர்‌, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

20.05.2022, 21.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

17.05.2022 முதல்‌ 19.05.2022 வரை: இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, குமரிக்கடல் பகுதி, தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

20.05.2022 முதல்‌ 21.05.2022 வரை: இலட்சதீவு, கர்நாடகா, கேரளா மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்‌ கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்துலும்‌ வீசக்கூடும்‌.

அந்தமான்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌ கிழக்கு மற்றும்‌ மத்திய கிழக்கு வங்கக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மேற்குறிப்பிட்ட நாட்களில்‌ மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகறார்கள்‌.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!