தமிழகத்தில் காலியாக உள்ள 26 டி.இ.ஓ பணியிடங்கள் – நிரந்தர அலுவலர்கள் நியமனம்!!

0
தமிழகத்தில் காலியாக உள்ள 26 டி.இ.ஓ பணியிடங்கள் - நிரந்தர அலுவலர்கள் நியமனம்!!
தமிழகத்தில் காலியாக உள்ள 26 டி.இ.ஓ பணியிடங்கள் - நிரந்தர அலுவலர்கள் நியமனம்!!
தமிழகத்தில் காலியாக உள்ள 26 டி.இ.ஓ பணியிடங்கள் – நிரந்தர அலுவலர்கள் நியமனம்!!

தமிழகத்தில் உள்ள கல்வி மாவட்டங்களில் காலியாக உள்ள 26 டி.இ.ஓ. பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியான நிலையில் கோவை மாவட்டத்தில் 2 டி.இ.ஓ. பணியிடங்களுக்கு நிரந்தர அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.இ.ஓ. பணியிடங்கள்:

தமிழகத்தில் உள்ள 124 கல்வி மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தல், உரிமம் புதுப்பித்தல், நலத்திட்டங்களை பள்ளிகளுக்கு கொண்டு சேர்த்தல் போன்ற பள்ளி நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் பணிகளுக்காக மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.) நியமிக்கப்படுவர். அந்த பணியிடங்களுக்கு 2 ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பபடாமல் உள்ளதால் டி.இ.ஓ. பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் டி.இ.ஓ. பணியிடங்களுக்கு தகுதியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தயாரிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியுள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்த ஆசிரியர்கள் பணிமூப்பின் அடிப்படையில் தேர்வு செய்து பட்டியல் தயார் செய்யப்படும்.

மே 18 முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மாநில அரசு அறிவிப்பு!!

பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைமை ஆசிரியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளவர்களா அல்லது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு ஆய்வு செய்யப்பட்டு 26 டி.இ.ஓ.கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில் உள்ள பேரூர், பொள்ளாச்சி கல்வி மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களில் 2 பேர் டி.இ.ஓ. பணியிடங்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ அறிவிப்பு, சிபிஎஸ்சி.,க்கு பொருந்துமா?? அதிகாரிகள் விளக்கம்!!

தேனி மாவட்டம், தாமரைகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக பணியாற்றிய சிவானந்தன் பேரூர் டி.இ.ஓ.,வாகவும் மற்றும் திண்டுக்கல், வடமதுரை, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கன்னிசாமி பொள்ளாச்சி டி.இ.ஓ.,வாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல தேனி மாவட்ட டி.இ.ஓ அலுவலகங்களில் நிரந்தர அலுவலர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!