தமிழக பள்ளி மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ அறிவிப்பு, சிபிஎஸ்சி.,க்கு பொருந்துமா?? அதிகாரிகள் விளக்கம்!!
தமிழகத்தில் உள்ள 9, 10 மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கும் பொருந்துமா? என்ற கேள்வி பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாணவர்கள் தேர்ச்சி:
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் ஜனவரி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும், பிப்ரவரி 8ம் தேதி முதல் 11 மற்றும் 9ம் வகுப்புகளுக்கும் திறக்கப்பட்டது. இதற்கு முன்னர் மாணவர்களுக்கான பாடங்கள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டாலும், அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பானோரிடம் இணைய வசதிகள் இல்லாத காரணத்தால் பள்ளிகள் திறந்த பின்னர் முழு பாடங்களையும் பள்ளிகள் நடத்த தொடங்கியது.
9 முதல் 12ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் மார்ச் 19 முதல் தொடக்கம் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 3ம் தேதி முதல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 11ம் வகுப்புக்கான தேர்வுகள் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இன்று திடீர் அறிவிப்பாக தமிழக முதல்வர் நடப்பு ஆண்டில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும், இந்த அறிவிப்பு சிபிஎஸ்சி மாணவர்களுக்கும் பொருந்துமா என்று பெற்றோர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக கல்வித்துறை அதிகாரிகள், தமிழக பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
For Online Test Series
கிளிக் செய்யவும்
To Join Whatsapp
கிளிக் செய்யவும்
To Join Facebook
கிளிக் செய்யவும்
To Join Telegram Channel
கிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channel
கிளிக் செய்யவும்
வணக்கம் தமிழ் நாடு ஆசிரியர் தேர்வுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு 2098 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இத்தேர்வுக்கு பள்ளி கல்வித்துறை முதுகலை பட்டதாரி ஆசிரியர் வயது வரம்பை 57ல் இருந்து 40வயதாக குறைத்துள்ளனர்.தற்போது PG TRB EXAMக்கு விண்ணப்பிக்க மார்ச் 1-03-2021 முதல் 25-03-2021வரை அறிவிப்பு செய்துள்ளனர்.எனவே முன்பு இருந்த அனைத்து வகுப்பினருக்கும் 57வயதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.முன்பு பணி ஓய்வு வயது 58ல் இருந்து தற்போது 60 வயதாக அரசு நிர்ணயம் செய்துள்ளது.தற்போது வேலை வாய்ப்பு இல்லாத முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் எண்ணிக்கை சுமார் 1500000 பேர் MA MSC MCOM with Bed முடித்து வேலை வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.எனவே பழைய 57 வயதை நடைமுறை படுத்த வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.