தமிழகத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை – முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு!!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது 11 ஆம் வகுப்பு சேர்க்கை நடத்தப்படக் கூடாது என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மக்கள் அரசு தெரிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்றினால் கொரோனாவில் இருந்து மீளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
TN Job “FB
Group” Join Now
1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் போது இதே போல மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால் அரையாண்டு, காலாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டதால் அந்த தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு 4 நாட்கள் விடுமுறை – புதுச்சேரி அரசு அறிவிப்பு!!
இந்த ஆண்டு எந்த தேர்வும் நாத்தப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சமூக வலைத்தளங்களில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளிவந்தது. அது தவறான தகவல் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் விளக்கமளித்துள்ளார்.
B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் சேர்க்கை தொடங்கப்படவில்லை. சில தனியார் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை வழங்க அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தற்போது உள்ள சூழ்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை வழங்கப்பட கூடாது என கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.