தமிழக பள்ளி மாணவிகள் கவனத்திற்கு – முதல்வரின் வேண்டுகோள்!

0
தமிழக பள்ளி மாணவிகள் கவனத்திற்கு - முதல்வரின் வேண்டுகோள்!
தமிழக பள்ளி மாணவிகள் கவனத்திற்கு - முதல்வரின் வேண்டுகோள்!
தமிழக பள்ளி மாணவிகள் கவனத்திற்கு – முதல்வரின் வேண்டுகோள்!

தமிழகத்தில் தொடர்ந்து பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து முதல்வர் தற்போது இது குறித்து பேசியுள்ளார். அதாவது, மாணவிகளுக்கு தற்கொலை எண்ணம் ஒருபோதும் வரவே கூடாது எனவும், மாணவிகள் தலைநிமிர்ந்து இருக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதல்வர் அறிக்கை

தமிழகத்தில் கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை செய்துகொண்டதை அடுத்து பல தற்கொலை சம்பவங்கள் நடைபெற ஆரம்பித்துவிட்டன. அதாவது, பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் உடனே மனமுடைந்து மாணவியர்கள் தற்கொலை என்கிற ஒன்றை தான் கையாள நினைக்கின்றனர். அந்த துன்பத்தில் இருந்து எப்படி மீள்வது என நினைக்காமல் வாழ்க்கையையே முடித்துக்கொள்ளும் அளவிற்கு மாணவர்கள் தயாராகிவிடுகின்றனர். அடுத்தடுத்து, தற்கொலை சம்பவம் நிகழ்வது பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரையும் கதிகலங்க வைத்து வருகிறது.

தமிழகத்தில் வரும் ஆக.5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

இந்நிலையில், சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொன்விழா ஆண்டில் முதல்வர்.மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அதாவது, தற்கொலை சம்பவம் தொடர்ந்து நடைபெறுவது மிகவும் வேதனையளிக்கிறது. அதாவது, மாணவர்கள் பள்ளியில் ஏதேனும் சிரமங்கள், பாலியல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொல்லைகள் மற்றும் பாலியல் சீண்டலுக்கு ஆளாக நேரிட்டால் அதனை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் எனவும், இதற்கு தற்கொலை ஒன்று தான் தீர்வு என ஒருபோதும் மாணவர்கள் நினைக்க கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மாணவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அதனை பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்களிடம் கூற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் நடத்தாமல் வகுப்பில் மாணவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வாங்கி கொடுக்கப்படும் எனவும், எந்த சூழ்நிலையிலும் தற்கொலை என்கிற எண்ணத்திற்கு மாணவிகள் தள்ளப்பட கூடாது எனவும், தலைநிமிரும் எண்ணம் தான் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here