தமிழகத்தில் வரும் ஆக.5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் வரும் ஆக.5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஆக.5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரும் ஆக.5ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள் மாதா பேராலய திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:

உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலய திருவிழா வருடம்தோறும் ஜூலை 26ம் தேதி துவங்கி ஆக.5 வரை வெகு சிறப்பாக நடைபெறும். இந்த திருவிழாவில் இலங்கை மலேசியா, சிங்கப்பூர் மற்றும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதா அன்னையை தரிசனம் செய்வார்கள். நிகழாண்டு 440 ஆவது பனிமய மாதா பேராலய திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்துக்கு முன்பு கூட்டு திருப்பலி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி, தலைமையில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பனிமாதா உருவம் பொறித்த கொடியை மேளதாளம் முழங்க ஊர்வலமாக அருள்தந்தைகள் கொண்டு வந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் உலக நன்மைக்காகவும் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபடவும் சிறப்பு ஜெபம் செய்து பனிமய மாதா உருவப்படம் பதித்த கொடியை ஏற்றினர்.

TN TET தேர்வு விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு – திருத்தம் செய்ய நாளை கடைசி நாள்!

அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் புறாக்கள் மற்றும் பலூன்களை பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் கி. செந்தில்ராஜ், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இன்று கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாள்கள் காலை, மாலையும் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அன்னையின் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடைபெற்ற இந்த திருவிழாவில் இந்த ஆண்டு லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் திருவிழாவின் பாதுகாப்புக்காக தூத்துக்குடி நகர் பகுதிகளில் 1000 போலீஸார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பனிமய மாதா பேராலய திருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 5 விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 13 (சனிக்கிழமை) அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here