தமிழகத்தில் புதிய கல்வியாண்டு தொடக்கம் – 12ம் மாணவர்களுக்கு தேர்வு எப்போது?
2021ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு இன்று தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்ற கல்வியாண்டு முடிந்தால் என்ன? 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெவித்துள்ளார்.
புதிய கல்வியாண்டு:
கடந்த ஒரு வருட காலமாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. அரசு, மாணவர்களுக்கு நோய் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால் காலவரையற்ற விடுமுறை அளித்துள்ளது. பாடங்கள் ஆன்லைன் மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை தேர்விர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு, செய்முறை தேர்வும் நடைபெற்றது. மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
தமிழக ரேஷன் கடைகளில் 13 மளிகைப் பொருட்கள் – இன்று முதல் டோக்கன் விநியோகம்!!
இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக மீண்டும் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது 2021ம் ஆண்டிற்கான புதிய கல்வியாண்டு நாளை தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.12 ஆம் வகுப்பு தேர்வு நடைபெறாமல் இருக்கிறது. இது குறித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், புதிய கல்வியாண்டு தொடங்கினால் என்ன கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என கூறினார்.
TN Job “FB
Group” Join Now
பெருந்தொற்று காலம் என்பதால் மாணவர்களின் நலன் கருதியே தேர்வு ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவி வருவதால் மாணவர்கள் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும். கொரோனா மாணவர்களின் எதிர்காலம், கல்வி போன்றவை எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு அவர்களின் உடல் நலமும் முக்கியம். அதனால் நோய் தொற்று குறைந்தவுடன் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.