தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள்? மருத்துவர்கள் கருத்து!!

0
தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள்? மருத்துவர்கள் கருத்து!!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள்? மருத்துவர்கள் கருத்து!!
தமிழகத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள்? மருத்துவர்கள் கருத்து!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில் ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது அது தொடர்பான முழு விபரங்களை காணலாம்.

ஊரடங்கில் தளர்வுகள்:

தமிழகத்தில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் கொரோனாவின் இரண்டாம் அலையின் வீரியம் காரணமாக தளர்வுகள் அடங்கிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அரசின் கட்டுப்பாடுகளை தமிழக மக்கள் முறையாக பின்பற்றவில்லை, இதன் எதிரொலியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்தது. இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூன் 6 வரை பணிக்கு வர விலக்கு!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி உடன் முடிவுக்கு வரும் நிலையில் வருகின்ற நாட்களில் சில தளர்வுகள் அளிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் பலனாக தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழக அரசு தளர்வுகளை அளிக்க முடிவு செய்தால் அதனை முழுமையாக வழங்கிவிட கூடாது.

TN Job “FB  Group” Join Now

பொதுப்போக்குவரத்து மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது. மேலும் இந்த மாதம் இறுதி வரை கோவில் போன்ற புனித ஸ்தலங்கள், திரையரங்கம் போன்றவற்றை திறக்க அனுமதி வழங்க கூடாது என்றும் ஜூலை மாதம் வரை பகுதி நேர ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் மற்றும் முதலில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே தளர்வுகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இப்படி செய்தால் மட்டுமே தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாம் அலையை தடுக்க முடியும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!