தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!

4
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு - புதிய தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அமல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் ஒரு வார காலம் (ஜூலை 5 வரை) நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் மாவட்ட வாரியாக வழங்கப்பட்ட தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் தொடக்கத்தில் அத்தியாவசிய கடைகள் செயல்பட குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் அனைத்து தளர்வுகளும் நீக்கப்பட்டு தீவிர முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது. இதனால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

புதிய 500 ரூபாய் நோட்டு செல்லாதா? மத்திய தகவல் அலுவலகம் விளக்கம்!

தினசரி 35 ஆயிரம் வரை பதிவாகி வந்த புதிய தொற்று எண்ணிக்கை தற்போது 6 ஆயிரமாக குறைந்து உள்ளது. இதனால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகைகளாக பிரிக்கப்பட்டு அதன்படி தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 21 முதல் பாதிப்பு அதிகமுள்ள 4 மாவட்டங்களில் பேருந்து பொது போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.

ஆகஸ்ட் மாதம் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்!

தற்போது ஜூன் 28க்கு பிறகான ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களுக்கு இரவு 7 மணிவரை கடைகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. டாஸ்மாக் கடைகள் திறக்க தொடர்ந்து தடை நீடிக்கிறது. மேலும் பேருந்து பொது போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை. அரசு, தனியார் அலுவலகங்கள் குறிப்பிட்ட அளவு பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்ப்பட்டு உள்ளது. இ-சேவை மையங்கள் செயல்படலாம். இந்த தளர்வுகள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) – நிதி அமைச்சகம் விளக்கம்!

வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களில் முக்கிய தளர்வாக மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையில் பேருந்து பொது போக்குவரத்து தொடங்கி உள்ளது. மேலும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகி உள்ளது. இதனால் தமிழகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. பிற 4 மாவட்டங்களில் மால்கள், வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

  1. upto Rs.15000/- monthly no problem otherwise Aavin may faces more the ratio water plus milk …people will not any way the sufferer.. Increasing the producer in quantum the milk may be the solution…or it is better to avoid milk maid products…thank you,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!