மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) – நிதி அமைச்சகம் விளக்கம்!

12
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) - நிதி அமைச்சகம் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) - நிதி அமைச்சகம் விளக்கம்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR) – நிதி அமைச்சகம் விளக்கம்!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக கடந்த வருடம் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த DA மற்றும் DR குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலின் உண்மைத்தன்மை குறித்து மத்திய நிதி அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது.

அகவிலைப்படி உண்டா?

கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் கடந்த வருடம் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. எனவே அரசு செலவினங்களை குறைத்து கொள்ள திட்டமிட்டது. இதன் விளைவாக மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) மற்றும் ஓய்வூதிய படி (DR) நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் 27 மாவட்டங்களில் பேருந்து சேவை – ஏற்பாடுகள் தீவிரம்!

இதன் விளைவாக 2021 ஜூன் 30 வரை 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 61 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் டிஏ உயர்வை நிதி அமைச்சகம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறுத்தி வைத்தது. இது மீண்டும் வழங்கப்படுவது குறித்து பல்வேறு தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. DA வழங்குவது குறித்து நேற்று (ஜூன் 26) முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன் முடிவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு டி.ஏ. மீண்டும் வழங்கப்படுவதாகவும், 2021 ஜூலை முதல் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DR வழங்கப்படுவதாக ஒரு ஆவணம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஜூன் 28 முதல் 50% ஊழியர்களுடன் நிறுவனங்கள் செயல்பட அனுமதி – மாநில அரசு!

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதன்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான DA மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு DR வழங்குவது தொடர்பான எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பு போலியானது. இத்தகைய உத்தரவு எதுவும் அரசால் அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1, 2020 மற்றும் ஜனவரி 1, 2021 முதல் செலுத்த வேண்டிய டிஏ மற்றும் டிஆரின் கூடுதல் தவணையும் செலுத்தப்படாது என்று செலவுத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA & DR)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

12 COMMENTS

 1. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2001ஜுலை 1 முதல் வழங்க போவதாக பல புள்ளி விவரங்கள் உங்களுக்கு கிடைத்த தகவல்கள் அல்லது உங்களின் அனுமானங்கள் போன்ற கணக்கு தவறானது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது என்று உங்கள் பதிவில் இன்று (27-06-2021)படித்தோம் . இனி அதிகாரபூர்வமான தகவல்கள் கிடைத்தால் மட்டும் பதிவுசெய்யவும் . என்னுடைய இந்த பதிவை நீக்குதல் வேண்டாம் முன்பு நீக்கியது போல்.

 2. In the minutes of the Meeting held yesterday, it stated as “the Department of Expenditure would prepare a Cabinet Note for releasing the stalled DA, from July, 21. It doesn’t have any words about arrears. So, now it is the work of the Department of Expenditure, to prepare a Cabinet Note and get it approved from the cabinet. Only after the issue of the orders, whether it is retrospective or prospective one. Dears please wait. Thank you.

 3. These type of news is just expectation but not true. . these guys are publishing news is just increase their viewers. So don’t believe or depend on such decorated fake news.

 4. முட்டாள்தனம் உண்மை
  தன்மை தெரியாமல் ஏன்
  ஒரு மாதகாலம் இந்த
  செய்தியை போட்டு அறுத்து விட்டார்கள்.

 5. I fully agree to the above comment by Mr. தங்கராஜ். Unconfirmed and misleading news when released gives a false hope to the concerned. Please practice true journelisam. Thanks

 6. All fake newses given…..Central Ministry told All Wrong news….not yet decided due to Pandemic.

  Dont spread Fake news

 7. இதுவரை பலமுறை இந்த D.Aமற்றும்,T.A சம்பந்தமான நிறைய பதிவுகளை போட்டு சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களையும் ,சுமார் 65 லட்சம் ஓய்வூதியம் பெறுகின்ற ஊழியர்களையும் அழுகின்ற குழந்தைக்கு வாழைப்பழம் காட்டி ஏமாற்றுவதைப்போல ,ஆதாரமில்லாத தகவல்களை பதிவு செய்வதை தயவு தவிருங்கள்..இது ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பது உங்களுக்கே தெரியவில்லையா ?
  ஒருவேளை அரசு அதிகார பூர்வமாக அறிவித்திருந்தார் நாங்கள்தான் முதன் முதலில் இந்த செய்தியை சொன்னோம் என்று பீற்றிக் கொள்வதற்காக லட்சக்கணக்கான ஊழியர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளாதீர்கள்..
  இது போன்ற போலியான அரசு உத்தரவுகள் பதிவிடப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…

 8. Our Government not for the People /Past few months.this news of Central Employees DA&DR details news have been published.But our Finance department is saying that it is fake document on 26.06.2021.It is rediculos past few months they have notnoticed .Now they are saying it’s fake document(Joo bolthey hain woo karthey Nahin Jo karthey Nahin Woh bolthey hain Ha ha ha ha …)

 9. It is an agreement between govt and employees.every day one news is given as if people should think crors of rs given to employees.this great news is daily in last one year

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!