தமிழகத்தில் நுாலக அலுவலர் பணியிடத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப வலியுறுத்தல்!

0
தமிழகத்தில் நுாலக அலுவலர் பணியிடத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே நிரப்ப வலியுறுத்தல்!
தமிழகத்தில் நுாலக அலுவலர் பணியிடத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் - உடனே நிரப்ப வலியுறுத்தல்!
தமிழகத்தில் நுாலக அலுவலர் பணியிடத்தில் அதிகரிக்கும் காலிப்பணியிடங்கள் – உடனே நிரப்ப வலியுறுத்தல்!

தமிழகத்தில் 16 மாவட்டத்தில் இருக்கும் நூலகத்தில் நுாலகர் பணியிடம் காலியாக இருப்பதால் நுாலக நிர்வாக பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் இப்பணியிடத்தில் தகுதியான நபர்களை உடனே நிரப்ப வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

நுாலக அலுவலர்

தமிழகத்தில் 32 மாவட்ட மைய நுாலகங்கள், 1,926 கிளை நுாலகங்கள், 1,914 ஊர்ப்புற நுாலகங்கள், 751 பகுதிநேர நுாலகங்கள் மற்றும் 14 நடமாடும் நுாலகங்கள் என மொத்தமாக 4,637 நுாலகங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பல்வேறு நூலகங்களில் நூலக நிர்வாகத்தை திறம்பட நடத்துவதற்கு நூலகர் பணியிடங்களில் ஏராளமான காலிப்பணியிடங்கள் உள்ளன.

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வாட்டி வதைக்க போகும் வறண்ட வெப்பநிலை – வானிலை மையம் தகவல்!

அதன் தொடர்ச்சியாக பெரம்பலுார், சென்னை, நாகப்பட்டினம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலுார், திருவாரூர், தஞ்சாவூர், கரூர், தர்மபுரி, நீலகிரி, கோவை, விழுப்புரம், ராமநாதபுரம், திருப்பூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் நிரந்தர நுாலக அலுவலரும் நியமிக்கப்படவில்லை. மேலும் வருகிற ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களில் அரியலுார், கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் அலுவலர்கள் ஓய்வு பெற உள்ளனர்.

Follow our Instagram for more Latest Updates

அதனால் அலுவலக நூலகர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு அரசு பொது நுாலகத்துறை பணியாளர் கழக மாநில துணைத்தலைவர் கூறியதாவது, திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி, 3ம் நிலை நூலகர்களுக்கு பதவி உயர்வு, காலமுறை ஊதியம் மற்றும் நூலக அலுவலர் பணியிடத்தில் இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!