தமிழக நிலஅளவை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் – மார்ச் 25க்குள் பதிலளிக்க உத்தரவு!!!

0
தமிழக நிலஅளவை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் - மார்ச் 25க்குள் பதிலளிக்க உத்தரவு!!!
தமிழக நிலஅளவை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் - மார்ச் 25க்குள் பதிலளிக்க உத்தரவு!!!
தமிழக நிலஅளவை துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் – மார்ச் 25க்குள் பதிலளிக்க உத்தரவு!!!

நில அளவை துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்த விசாரணையில் தமிழக அரசிக்கு நோட்டீஸ் அனுப்பக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

நிலஅளவை துறை பணியிடங்கள்:

நில அளவை துறையில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் வரைவாளர் பணிகளுக்கான இடங்களை நிரப்புவது குறித்த மனுவை தமிழ்நாடு நில அளவை கணிக வரைவாளர் ஒன்றிப்பு மாநில தலைவர் முத்துராஜ் தாக்கல் செய்தார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளவை, “தமிழகத்தில் உள்ள 307 வருவாய் வட்டங்களில் உட்பிரிவு பட்டா மாறுதலுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன. இதனை ஆய்வு செய்து சரியான நிலவரி பெற வேண்டும்.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 15 முதல் வகுப்புகள் தொடக்கம் – வேளாண் பல்கலை அறிவிப்பு!!!

இதற்காக கிராம வட்ட வருவாய் ஆவணங்களில் சில மாற்றங்கள் வேண்டும். மேலும் நீர்வழித் தடங்கள், நீராதாரங்கள் போன்றவற்றை பாதுகாக்க நவீன முறையிலான கணினி கொண்டு அந்த இடங்கள் பற்றிய தகவல்களை தொகுத்து நில அளவை எல்லைகளை பராமரிக்க வேண்டும். நில அளவைகளில் அமைக்கப்பட்ட பல புல எண்களை இணைத்து நிலத்தின் தற்போதைய அமைப்பை காட்ட வரைபடங்களை உருவாக்க வரையாளர்கள் தேவை எனவே அந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும்.

தமிழக அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கான முன்பணம் – ரூ.40 லட்சமாக அதிகரிப்பு!!

நில அளவை துறையில் உள்ள வரைவளர், நில வருவாய் ஆவண வரைவாளர், முதுநிலை வரைவாளர் ஆகிய காலியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வரைவாளர் பணியிடங்களை நில அளவர்களாக மாற்றப்பட்ட அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.”, இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இந்திய மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு – அடுத்த வாரம் கலந்தாய்வு!!

இந்த மனு குறித்த வழக்கு விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ் இந்த வழக்கு தொடர்பாக பேரிடர் மேலாண்மை துறை முதன்மை இயக்குனர் மற்றும் நில அளவை, நில வரி திட்டம் இயக்குனர் மற்றும் TNPSC செயலருக்கு நோட்டீஸ் அனுப்பி இந்த வழக்கை மார்ச் 17 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!