தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஜூன் 9 கடைசி நாள்!

0
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - ஜூன் 9 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - ஜூன் 9 கடைசி நாள்!
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை – ஜூன் 9 கடைசி நாள்!

தமிழகத்தில் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் இயங்கி வரும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பதிவு தொடங்கி இருக்கும் நிலையில் விண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 9 கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கடைசி நாள்

தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் கீழ் சுமார் 54 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லுரிங்களில் கடந்த மே 20 ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கைகான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. மேலும் இந்த கல்லூரிகளில் சேர 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் மூலம் ஜூன் 9 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

THDC India நிறுவனத்தில் 52 காலிப்பணியிடங்கள் – Engineering பட்டதாரிகளுக்கான வாய்ப்பு!

இந்த படிப்பில் சேர மாணவர்கள் கட்டாயம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் எனவும் மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 150 செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு எந்த விண்ணப்ப கட்டணமும் இல்லை என வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த படிப்பில் சேர இணைய வசதி இல்லாத மாணவர்கள் அருகே உள்ள இ சேவை மையங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!