தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!

2
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு - அரசு உத்தரவு!!
தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!

தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஆனது மேலும் ஒரு வார காலம் அதாவது ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவினை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிறப்பித்து உள்ளார்.

முழு ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகம் முழுவதும் தினசரி 33 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், 400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் இது மேலும் எவ்வித தளர்வுகளும் இன்றி மே 24 முதல் மே 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த காலத்தில் எவ்வித கடைகளும் (மருந்தகங்கள் தவிர) திறக்க தடை விதிக்கப்பட்டது.

ஜூன் 11 வரை முழு ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!

தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் நேற்று முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு ஜூன் 7ம் தேதி காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்து உள்ளார். மேலும் ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் கோரும் பொருட்களை வீட்டிற்கே நேரடியாக சென்று காலை 7 மணிமுதல் மாலை 6 மணிவரை வழங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

அதுமட்டுமின்றி தற்போது உள்ளபடி காய்கறி, பழங்கள் வீடுகளுக்கு நேரடியாக வண்டிகள் வாயிலாக விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. Ama eppadi lockdown na eppadi pozhapu already work from homd kuduthu utkara vechi irukiga ada kuda sambalam seriya podradhu lockdown pota seriya poguma aenga panaga school poi 2 varasum aguthu book thoradu ila ippa gud nadu pona year avar indha year neega sir bus e registration panni ponna governorate loss

  2. i dont like this lock down edu thani maiya irukiraa madiri iruku ennaku paithiyama pudikiraa madiri eruku pls oru naal bus a vidunga pls goverment kitta idu oru veandu kool

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!