தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு – ஜூன் முதல் விநியோகம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு - ஜூன் முதல் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு - ஜூன் முதல் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகை பொருட்கள் தொகுப்பு – ஜூன் முதல் விநியோகம்!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ம் தேதி வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை விநியோகம் செய்ய முதல்வர் அவர்கள் உத்தரவிட்டு உள்ளார்.

மளிகைப் பொருட்கள்:

தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் 24ம் தேதி முதல் எவ்வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கி உள்ளது. இருப்பினும் முழு ஊரடங்கால் பொதுமக்கள் பலர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.

தமிழகத்தில் ஜூன் 7 வரை தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு நீட்டிப்பு – அரசு உத்தரவு!!

இதனால் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். அதற்கான முதல் தவணை ரூ.2000 வழங்கப்பட்டு விட்டது. இதன் 2வது தவணை 2000 ரூபாய் ஜூன் மாதம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்நிலையில் முதல்வர் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், ஏற்கனவே அமலில் உள்ள தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கானது ஜூன் 7ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது தவிர, பொது மக்களின்‌ சிரமத்தை குறைக்கும்‌ வகையில்‌, 13 மளிகைப்‌ பொருட்கள்‌ அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌, வரும்‌ ஜூன்‌ மாதம்‌ முதல்‌ வழங்கிட, கூட்டுறவு மற்றும்‌ நுகர்வோர்‌ பாதுகாப்புத்‌ துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் பொதுமக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ள நிலையில், ரேஷன் கடைகள் தினசரி காலை 8 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

13 மளிகைப் பொருட்கள்:

  • கோதுமை மாவு -1 கிலோ
  • உப்பு – 1 கிலோ
  • சர்க்கரை – 500 கிராம்
  • ரவை – 1 கிலோ
  • உளுந்த பருப்பு – 500 கிராம்
  • புளி – 250 கிராம்
  • கடலை பருப்பு – 250 கிராம்
  • டீ தூள் – 250 கிராம்
  • சீரகம் – 100 கிராம்
  • மஞ்சள் தூள் – 100 கிராம்
  • மிளகாய் தூள் – 100 கிராம்
  • குளியல் சோப் – 1
  • துணி சோப் – 1

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!