தமிழக அரசுத்துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முக்கிய விவரங்கள்!

0
தமிழக அரசுத்துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முக்கிய விவரங்கள்!
தமிழக அரசுத்துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு - முக்கிய விவரங்கள்!
தமிழக அரசுத்துறையில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – முக்கிய விவரங்கள்!

சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பன்முக உதவியாளர், பாதுகாப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

அரசு வேலைவாய்ப்பு:

கடந்த 2020ம் ஆண்டு முதல் நாட்டில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த கொரோனா தொற்றின் காரணமாக மோசமான விளைவுகள் பல தரப்புகளில் ஏற்பட்டது. கடும் பொருளாதார சிக்கலினால் பல நிறுவனங்களிலும் பணி இழப்பு, சம்பள நீக்கம் போன்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கொரோனா பரவல் பாதிப்பினால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் புதிய பணி நியமனங்களை நிலுவையில் வைத்திருந்தது. தற்போது நிலைமை படிப்படியாக சீரடைந்து வரும் நிலையில், புதிய பணிநியமணங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – RBI அறிவிப்பு வெளியீடு!

அதன்படி, பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி அமைச்சகம் சார்பில், மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், வழக்கு அலுவலர்கள், பன்முக உதவியாளர், பாதுகாப்பாளர் போன்ற பணியிடங்களுக்கு காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதிகள் மற்றும் திறன் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை நேர்முகத்தேர்வு மூலம் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசின் https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/06/2022061491.pdf என்ற இணையதளப் பக்கத்தின் மூலம் பணிக்கான விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 ஆவது தளம், சிங்காரவேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை – 600001 என்ற முகவரியில் 30.6.2022ம் தேதிக்குள் கிடைக்கும் படி தபால் செய்ய வேண்டும்.

மைய நிர்வாகி

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 4 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

மூத்த ஆலோசகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,000

வழக்கு அலுவலர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை : 11

கல்வித் தகுதி : சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு ஆண்டு பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

பன்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : ஏதாவது அலுவலகத்தில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,400

பாதுகாப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!