தமிழகத்தில் 100 புதிய BS6 ரக பேருந்துகள் அறிமுகம் – இன்று முதல் இயக்கம்!!

0
தமிழகத்தில் 100 புதிய BS6 ரக பேருந்துகள் அறிமுகம் - இன்று முதல் இயக்கம்!!

தமிழகத்தில் காற்றின் மாசுபாட்டை குறைக்கும் வகையில் முதற்கட்டமாக 100 புதிய BS6 ரக அரசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அரசு பேருந்து:

தமிழகத்தில் போக்குவரத்து கழகத்தின் சார்பில் அரசு ஏகப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு விடுமுறை தினங்கள், வார இறுதி நாட்களின் போதும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் பழைய பேருந்துகளை புதுப்பித்தல், புதிய பேருந்துகளை கொள்முதல் செய்தல், பேருந்து பணிமனைகளை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், தற்போது காற்றை மாசு படுத்தாத வகையில் தமிழக போக்குவரத்து துறைக்கு BS6 ரக பேருந்துகளை முதல்வர் அவர்கள் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதாவது, போக்குவரத்து துறைக்கு மொத்தமாக 1,666 BS6 ரக பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 100BS6 ரக பேருந்துகளை முதல்வர் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

TNPSC CESE 2023 தேர்வர்கள் கவனத்திற்கு – விடைக்குறிப்பு சற்றுமுன் வெளியீடு!  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!