மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ – பாஸ் தேவையில்லை – தமிழக அரசு விளக்கம்!!

0
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ - பாஸ் தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்!!
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ - பாஸ் தேவையில்லை - தமிழக அரசு விளக்கம்!!
மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு இ – பாஸ் தேவையில்லை – தமிழக அரசு விளக்கம்!!

தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையிலும் பயணிக்க இ – பாஸ் அவசியம் என்று செய்தி பரப்படுகிறது. இது குறித்த விளக்கங்களை தமிழக அரசு அளித்துள்ளது.

இ – பாஸ் அவசியம்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சம் காரணமாக கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாயவசிய பொருட்களான மளிகை, இறைச்சி போன்ற கடைகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் திறக்க அனுமதியில்லை. பொதுமக்களின் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் – அரசு வருமான இழப்பு எதிரொலி!!

இருப்பினும் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, உதாரணமாக திருமணம், உறவினர் இறப்பு, வேலைவாய்ப்பு, நேர்காணல் போன்றவைகளுக்காக மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தளர்வுகளை மக்கள் முறையாக பயன்படுத்தாமல் அதிக அளவில் வெளியில் சுற்றுவதை கவனித்த அரசு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தியது. இதனால் மே 17ம் தேதி முதல் தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான மற்றும் மாவட்டங்களுக்குள் உள்ள போக்குவரத்திற்கு இ- பதிவு தேவை என்பதை அறிவிடத்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் இவை தவறாக புரிந்து கொள்ளப்பட்டு மாவட்டங்களுக்கு இடையிலான மற்றும் மாவட்டங்களுக்குள் பயணிக்க இ – பாஸ் அவசியம் என்று செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று தமிழக அரசு இரவு இது குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், இ – பாஸ் வேறு, இ – பதிவு என்பது வேறு. தமிழகத்திற்குள் பயணிக்க இ- பதிவு முறையே போதுமானதாகும். பொதுமக்கள் தங்களது ஆவண ஆதாரங்களை https://eregister.tnega.org இணையதளத்தில் இ-பதிவு செய்து, இ பதிவு மேற்கொண்டதற்கான ஆதாரத்தை வைத்துக் கொண்டு எவ்விதமான தடையின்றி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

பள்ளி, கல்லூரிகளில் மே 20 முதல் ஆன்லைன் வகுப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

இ பாஸ் என்றால் இணையத்தில் விண்ணப்பித்து அரசின் ஒப்புதல் பெற்ற பிறகே பயணிக்க வேண்டும், ஆனால், இ பதிவு என்றால் இணையத்தில் பதிவு செய்து அதன் ஆவணத்தை வைத்திருந்தாலே போதும். அரசின் ஒப்புதல் பெற தேவையில்லை என்பதுதான் அரசின் அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!