ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் – அரசு வருமான இழப்பு எதிரொலி!!

17
ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் - அரசு வருமான இழப்பு எதிரொலி!!
ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் - அரசு வருமான இழப்பு எதிரொலி!!
ஊரடங்கு முடிந்ததும் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயரும் – அரசு வருமான இழப்பு எதிரொலி!!

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முழு ஊரடங்கு காரணமாக அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடு செய்வதற்காக ஊரடங்கு முடிந்த பிறகு டாஸ்மாக் மதுபங்களின் விலையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

வருவாய் இழப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சம் அடைந்து உள்ள காரணத்தால் கடந்த மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மளிகை, இறைச்சி போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் னைத்தும் செயல்பட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் முக்கிய வருவாய் ஆதாரமான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளில் மே 20 முதல் ஆன்லைன் வகுப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

15 நாட்கள் முழு ஊரடங்கால் அரசுக்கு 2,900 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கொரோனா பாதிப்புகள் குறையாத காரணத்தால் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் அரசுக்கு மேலும், வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

டாஸ்மாக் மதுபானங்களின் விலை கடந்த ஒரு ஆண்டாக உயர்த்தப்பட வில்லை. பெட்ரோல், டீசல் விற்பனை 70% குறைந்து விட்டதால் அதன் மூலம் கிடைக்கும் வருவாயும் குறைந்திருக்கிறது. இதனால் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதிக்காத வகையில் அரசின் வருவாயை கூடுவதற்கு டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்துவதை தவிர அரசுக்கு வேறு வழியில்லை என்று நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

17 COMMENTS

  1. டாஸ்மாக் கடைகளில் குவாட்டருக்கு ஐந்து, ஆப்புக்கு பத்து, புல்லுக்கு இருபது ரூபாய் என்று MRP க்கு மேல வாங்குறாங்க அந்த ரூபாய சரக்கு விலையில் ஏத்திவச்சு, MRP க்கு மேல விற்கக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு போட்டால், பாவம் குடிமகனுக்கும் பாதிக்காது 😆, அரசுக்கும் வருவாய் அதிகரிக்கும், அரசு பரிசீலிக்கலாமே!🤔.

    • எங்களூர் கடையில் 140 உருவா குவார்ட்டர் 150 உருவா. தட்டிக் கேட்டால் சரக்கு இல்லை என்கிறான் விற்பனையாளன். கேட்பதற்கு நாதியில்லை. கேரளத்தை போன்று விற்பனையை கணினிமயம் ஆக்க வேண்டும். வாங்கும் சரக்குககுக்கு பில் தர வேண்டும். புகாருக்கு டோல் பிரி நம்பர் கொடுக்கப்பட வேண்டும். புதியவர் ஆட்சியிலாவது நிலைமை மாறுமா? ‘குடி’மக்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.

  2. தன் நாட்டு மக்களை மதுபானம் குடிக்க வைத்து அதனால் வரும் அரசு வருமானம் தேவையா. இந்த மதுவினால் நாட்டின் 90% குடும்பத்தையும் சீரழித்து வருமானம் ஈட்டும் அரசு பிரமாதம் எவ்வளவு அருமையான அரசாங்கம். இந்த குடியினால் எத்தனை குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்தால் அரசுக்கு என்ன கவலை. வருமானம் வந்தால் போதும். எங்கள் நாட்டின் அரசாட்சியை கண்டால் பிரமிக்க வைக்கிறது . ஊடகங்கள் எவ்வளவோ நாட்டின் விஷயங்களை பற்றி விவாதிக்கிறீர்கள். ஏன் இந்த மதுபானம் ஓழிப்பு பற்றி மட்டும் கண்டு கொள்வதில்லை. மது நாட்டிற்கும் கேடு வீட்டிற்கும் கேடு. ஆனால் அதனால் வருமாடம் ஈட்டும் அரசு. சற்று சிந்தியுங்கள்

  3. Ippavum 1 quter 350 kku black la oodthu itha vida government velai yettuma thayavu seithu velaiyai kuraikka vendum illai enil kudikaararkalin porattam thodangum by kuvaddar kudikaarar nalacchangam Tamilnadu

  4. அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளத்தை பாதியாகக் குறைத்தாலே அரசு எவ்வளவோ மக்களுக்கான நலத் திட்டங்கள் செய்ய முடியும்

  5. நீங்கள் என்னமோ செய்யுங்கள் ஒரு குவாட்டர் ருபாய் 500 ஒரிஜினல் விற்பனைக்கு வந்துள்ளது அறிவியுங்கள்

  6. 10.5.2021முதல் தெருவுக்கு தெரு ஒரு வீட்டிலாவது
    மது விற்கப்படுகிறது
    120=350ரூ,
    150=400ரூ;
    190=450ரூ;
    230=500ரூ;
    300=600ரூ;
    250=550ரூ
    24×7நாள் முழுதும் விற்க்கும் படுகிறது
    இந்த லாக்டவுனில்
    அரசாங்க வருவாய் 24,000 கோடி
    கள்ளவியாபரிகளுக்கு சென்று உள்ளது
    மது ஆலைகளை மூடாமல் மதுவை ஒழிக்கமுடியாதது
    இது மேலும்
    லாக்டவுனில் விலை உயரஉயர குவாட்டருக்காக கொலைகள் நடக்கவும் வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கிறது இதுதான் உண்மை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!