தமிழக அரசு பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்குகள் – இன்று (மே 26) வெளியீடு!
தமிழக அரசு பணியாளர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்களை இன்று (மே 26) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது
அரசு அறிவிப்பு
தமிழக அரசு பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கடந்த 2003-ம் ஆண்டு நடை முறைக்கு கொண்டுவரப்பட்டது. அத்திட்டத்தின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்களை பதிவிறக்கம் செய்வது குறித்த அரசாணை வெளியாகி இருக்கிறது. அதில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்கள் தொகுக்கப்பட்டு இன்று (மே 26) காலை 10 மணிக்கு அரசு தகவல் தொகுப்பு விவர மையம் வெளியிடப்பட இருக்கிறது.
தமிழக ESIC வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.69,000/-
இந்நிலையில் அரசு பணியாளர்கள் ஓய்வூதிய திட்ட கணக்கு தாள்களை அந்த துறையின் cps.tn.gov.in/public என்ற இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அரசு பணியாளர்கள் இந்த இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 5,45,297 தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp
Group” for Latest Updates